' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நாராய் நாராய் செங்கால் நாராய்

 நாராய் நாராய் செங்கால் நாராய்

இன்று நான் உங்களுக்கு வழங்குவது
சத்திமுத்தப் புலவர் பாடிய

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

நாரை விடு தூது என்ற இந்நூலின் ஆசிரியர் சத்திமுத்தப் புலவர். இவர் சத்திமுத்தம் என்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரின் இயற்பெயர் என்னவென்று அறியப்படவில்லை. சத்திமுத்தம் என்பது கும்பகோணம் அருகிலுள்ள தலமாகும். உமையம்மை இறைவனை வழிபட்டுத் தழுவி முத்தமிட்ட காரணத்தால் சத்திமுத்தம் என்ற பெயர் வழங்கப்படுகிறது என்பர்.



நாராய் நாராய் செங்கால் நாராய்
என்ற பாடலின் முதல் மூன்று வரிகளைப் பாடிய 
மெல்லிசை மன்னரின் பாடல் !
 

 

விளக்கம்




கருத்துகள் இல்லை

Open-Air-Sommerkino auf der Dachterrasse mit Skyline-Blick.

  Ein kleines Stück vom Kuchen Ort :                                    Frankfurt...