சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்
சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்
01. அல்லியம்
02. கொடுகொட்டி
03. குடைக்கூத்து
04. குடக்கூத்து
05. பாண்டரங்கம்
06. மல்லியம்
07. துடிக்கூத்து
08. கடையம்
09. பேடிக்கூத்து
10. மரக்காலாடல்
11. பாவைக்கூத்து
மாதவி ஆடிய பதினோராடல்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்//
சிவனும் உமையும் கை கொட்டி ஆடிய கொடுகொட்டியும் அதைத் தொடர்ந்து சிவன்
நீறணிந்து திரிபுரம் எரித்தாடிய பாண்டரங்கத்துடன் தொடங்கும் பதினோராடல்
தொடர்ந்து வஞ்சன் கஞ்சனை கண்ணன் வதைத்து ஆடிய ஆடலுடனும், மல்லனை வெல்ல ஆடிய
மல்லாடலுடனும் தொடர்கிறது.
அவுணர்களை வெல்ல ஆடிய துடியும், குடையும் முருகன் ஆடியது.
நீள்நிலம் அளந்தும் நெடும்பூமி தாவியளந்தும் மாயோனாடியது குடக்கூத்து.
ஆண்மை திரிந்து பெண்மைக் கோலத்தில் காமன் ஆடியது பேடிக்கூத்து.
உண்மைப் போரால் அவுணர்களை வெல்லல் அரிதென்றதால் வஞ்சப் போரால் மரக்கால்
பூண்டு கொற்றவை ஆடியது மரக்காலாடல்.
கொல்லிப் பாவை வடிவெடுத்து செய்யோள் ஆடியது பாவைக்கூத்து.
இறுதியாக கடைசியர் (உழத்தியர்) வடிவங் கொண்டு இந்திராணி(அயிராணி) மருத
நிலத்தில் ஆடியது கடைக்கூத்து.
இந்தக் கூத்துக்கள் இவர்களால் ஆடப்பெற்றது என்பது குறித்தும் அதன்
உறுப்புகள் குறித்தும் பின்வரும் சூத்திரங்களால் அறியலாம்.
ஸ்ரீமதி கவிதா லக்ஷ்மியின் நெறியாள்கையில் நோர்வே கலாசாதனா பள்ளியினரால், வலையொளியில் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை