ஆலயங்கள் தேவையில்லை
ஆ: ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும் மனிதா
சஞ்சலம் ஏதுமில்லை
ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும் மனிதா
சஞ்சலம் ஏதுமில்லை
தாய் போன்ற தெய்வமுமில்லை
தாய் இன்றி ஜீவனுமில்லை
தாயின் அன்பு கடனைத்
திருப்பி தந்தவர் யாருமில்லை
ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும் மனிதா
சஞ்சலம் ஏதுமில்லை
பெ: ஆ... ஆ.. ஆ.. ஆ..ஆ
ஆரிரோ கண்ணான கண்மணியே கண்ணுறங்கு
ஆ: தூங்கும் வேளையில் பிள்ளை இருமினால்
துள்ளி எழுந்த என் அம்மா
ஆவி பதறி தான் அழுது புலம்பினேன்
இருக்கின்றாள் சும்மா
எங்கு சென்ற போதும் என்னை
துணையாக அழைப்பாயே
சொர்க்க வாசல் போகும் போது
தனியாகச் சென்றாயே
தலையாட்டு விதியின் கையில்
விளையாட்டு பொம்மை ஆனேன்
தாயின் ஞாபக அலைகள் வீசும்
தனிமைத் தீவானேன்
பெ:ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும் மனிதா
சஞ்சலம் ஏதுமில்லை
ஆ...ஆ... ஆ.. ஆ..ஆ
பெ:வெள்ளி நிலவுதான்
தொலைவில் இருப்பினும்
வெளிச்சம் பூமியில் வீசும்
உலக உறவு தான் அறுந்த போதிலும்
தொடரும் தாய்ப் பாசம்
ஆவியாகும் தண்ணீர் மீண்டும்
மழையாய் பூமியைத் தீண்டும்
சோர்ந்த நேரம் மகனின் கனவில்
துணையாய் தாய் முகம் தோன்றும்
ஊராரை ஊட்டி வளர்த்தேன்
ஊரே உன் உறவாய் மாறும்
உன்னைத் தேடும் அன்னை வடிவில்
என்னை நீ காண்பாய்
ஆலயங்கள் தேவையில்லை
ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும் மகனே
சஞ்சலம் ஏதுமில்லை
ஆ&பெ:தாய் போன்ற தெய்வமுமில்லை
தாய் இன்றி ஜீவனுமில்லை
தாயின் அன்பு கடனைத்
திருப்பி தந்தவர் யாருமில்லை
தாயின் அன்பு கடனைத்
திருப்பி தந்தவர் யாருமில்லை
தாயின் அன்பு கடனைத்
திருப்பி தந்தவர் யாருமில்லை
படம்: காமராசு
ஆண்டு: 2002
பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா
இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடல்வரிகள்: கவிஞர் மு. மேத்தா
கருத்துகள் இல்லை