' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல்



( 24 ஜூன் 1927 – 17 அக்டோபர்1981)
“கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..”
கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல் இதுதான் என்று இத்தனை நாள் எண்ணிக் கொண்டிருந்தேன்... எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன்...!
ஆனால் இன்று கண்ணில் பட்ட ஒரு தகவல் , என் எண்ணம் தவறென எடுத்துக் காட்டியது..!.
சினிமாவுக்காக கண்ணதாசன் கடைசியாக எழுதியது அந்த “மூன்றாம் பிறை” பாடல்தான்...!

ஆனால் ..தமிழுக்காக ..தமிழர்களுக்காக கண்ணதாசன் எழுதிய கடைசிக் கவிதை...

இதோ..அது பற்றிய தகவல்...

உடல் நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கண்ணதாசன்... அந்த சமயத்தில் ..அமெரிக்காவில் வாழும் தமிழ் அன்பர்கள் , தங்கள் குழந்தைகளோடு கண்ணதாசனைக் காண வந்தார்களாம்...
அந்தக் குழந்தைகளோடு கண்ணதாசன் தமிழில் உரையாட ..அவருக்கு அதிர்ச்சி...!

வந்த எந்த தமிழ் குழந்தைக்கும் தமிழில் பேசத் தெரியவில்லை...!
கண்ணதாசன் அந்த அமெரிக்க தமிழர்களிடம் ஆழ்ந்த மன வருத்தத்துடன் கேட்டாராம்...

“தமிழர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழை சொல்லித் தர வேண்டாமா..?”

இப்படிக் கேட்ட கண்ணதாசன் , அமெரிக்க மருத்துவமனையில் ..அந்த வேளையிலேயே எழுதிய அழகிய கவிதை ஒன்று...!

“மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு
மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!”


# இதுவே கண்ணதாசனின் கடைசிக் கவிதை...!



கண்ணதாசன் இறப்பின்போது கவிஞர் வாலி கூறியது ….

"கண்ணதாசன் இறப்பிற்கு காரணம் மதுவருந்தியது…

கண்ணதாசன் இறந்ததை நினைத்து மது வருந்தியது…"


கருத்துகள் இல்லை