' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

வாயாடி பெத்த புள்ள‌

வாயாடி பெத்த புள்ள‌

 
 
 

 

வாயாடி பெத்த புள்ள‌
வர போறா நெல்ல போல‌
யார் இவ... யார் இவ...
கையில‌ சுத்துற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல‌ கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ... யார் இவ...

யார் இந்த தேவதை ஆனந்தப்பூ மக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக‌
நீ எந்தன் சாமி தான்
என்னை பெத்த சின்ன தாயே


அன்னக்கிளியே வண்ணக்குயிலே
குட்டி குரும்பே கட்டி கரும்பே... ஆ... ஹா...
செல்ல கிளியே சின்ன சிலையே
அப்பன் நகலா பிறந்தவளா.. ஹே....

அப்பனுக்கு ஆஸ்தியும் நான் தானே
ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமாய் ஒசற‌க்க பறந்தேனே

எனக்கு இருக்கும் கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே
பாசத்தில் விளையுற வயல போல் இருப்பேனே

பொட்டபுள்ள நெனப்புள்ள‌ பசி எனக்கில்லையே
இவ சிரிப்புல மயிலே
வானவில்லு குடைகுள்ளே மழை பஞ்சமில்ல
இடி மின்னல் இவகூட‌ பாட்டுகட்டி ஆடும்

யார் இந்த தேவதை

தனனன... தன்னன நன‌...

வால் மட்டும் இல்லையே


ஆசமக என்ன செஞ்சாலும்
அதட்ட‌கூட ஆசைபட மாட்டேன்
என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே

செவத்து மேல பந்த போலதான்
சனியையும் சொலட்டி அடிப்பாளே
காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாளே

எப்பவும் செல்லபுள்ள‌ விளையாட்டு புள்ள‌
ரெட்டசுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல
ஆசை பொண்ணு ஆயுள்தானே கூட்டிகிட்டு போகும்

வாயாடி பெத்த புள்ள‌
வர போறா நெல்ல போல‌
யார் இவ... யார் இவ...
கையில‌ சுத்துற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல‌ கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ... யார் இவ...


யார் இந்த தேவதை ஆனந்தப்பூ மக
வால் மட்டும் இல்லையே

சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக‌
நீ எந்தன் சாமி தான்
என்னை பெத்த சின்ன தாயே


 

 

கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...