' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

Penn Language Center (PLC) the University of Pennsylvania முனைவர் வாசு அரங்கநாதன்

 


 


முனைவர் வாசு அரங்கநாதன் தனது முனைவர் பட்டத்தைப் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு பெற்றார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வு திருமூலர் எழுதிய திருமத்திரந்தின் மொழி நடை மற்றும் தத்துவக் கொள்கைகள் பற்றியதாகும்.    அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும்  வாஷிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டல் ஆகிய கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியியல் பட்டங்கள் பெற்றுள்ளார். வாசு தனது ஆய்வைத் தமிழ் மொழியியல், மொழி கற்பித்தல் மற்றும் தமிழ் மொழி இலக்கியம் ஆகிய துறைகளில் கடந்த முப்பது வருடங்களாகச் செய்துவருகிறார்.  இவருடைய Tamil Language in Context: A Comprehensive Approach to Learning Tamil என்னும் நூலை உலகெங்கிலும் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் பலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.  இவரது உதவியோடு பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட தமிழ் கற்றலுக்கான இணையப் பக்கத்தை (http://www.southasia.upenn.edu/tamil) உலகெங்கிலிருந்தும் பல தமிழ் மாணவர்கள் பயன்படுத்திவருகின்றனர். வாசுவின் இரண்டாவது நூலாகிய “Computational Approaches to Tamil Linguisitics” என்னும் நூலை சென்னை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழ் இலக்கியத் தரவுகளைக் கணினியில் உள்ளீடு செய்து அவற்றைப் பயன்படுத்தி (http://sangam.tamilnlp.com/) எப்படி தமிழ் ஆய்வைப் புதிய அணுகுமுறையில் செய்ய முடியும் என இந்நூல் விளக்குவது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள திரு. அரங்கநாதன் இத்தலைப்புகளில் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். தமிழில் எழுதியுள்ள இவருடைய மூன்றாவது நூலான “இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்” என்னும் நூலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இலக்கிய உத்திகளை விரிவாக ஆயும் நூல் இது.   இவருடைய சமீபத்திய நூல் “இக்காலத் தொல்காப்பிய மரபு”.  இந்நூலை சென்னையில் நியூசெஞ்சுரி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.  மேலை நாட்டு மொழி இலக்கணங்களையும் தொல்காப்பிய இலக்கணத்தையும் ஒப்பிட்டுத் தமிழ்மொழியின் இக்கால இலக்கணத்தை விளக்குகிறது இந்நூல். வாஷிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டல், மிச்சிகன் பல்கலைக்கழகம், ஆன் ஆர்பர், விஸ்கான்சின் பல்கலைக்கழகம், மேடிசன் ஆகிய பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தையும் கற்பித்திருக்கிறார். சங்ககாலந்தொட்டு மாறிவரும் தமிழ் மொழியையும் பல்வேறு இலக்கியங்களின் தாக்கங்களையும் வரலாற்று மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்ந்தறிவதையே வாசுவின் பல கட்டுரைகளும் நூற்களும் எடுத்தியம்புகின்றன.  வாசு தற்போது பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் கடந்த இருபது வருடங்களாகத் தெற்காசியத் துறையில் தமிழ் மொழி, சங்க இலக்கியம், சமய இலக்கியம், தமிழ் இலக்கிய வரலாறு  ஆகிய தலைப்புகளில் பாடங்களைக் கற்பித்து வருவதோடு இவற்றில் ஆய்வு செய்து வரும் மாணவர்களுக்கு ஆய்வு நெறியாளரகாவும் இருந்து வருகிறார்.  தமிழகத்தில் சத்திரங்கள், திருமாவளவனின் அரசியல் அணுகுமுறை, கண்திருஷ்டி, தமிழ் இளைஞர்களிடையே சினிமாவின் தாக்கம், தெற்காசிய இஸ்லாம் போன்ற ஆய்வுகளில் இவருடைய மாணவர்கள் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டைப் பெற்றுள்ளனர்.  

 

 

சுருக்கமான விளக்கம்:

முனைவர் வாசு அரங்கநாதன் தனது முனைவர் பட்டத்தைப் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு பெற்றார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வு திருமூலர் எழுதிய திருமத்திரந்தின் மொழி நடை மற்றும் தத்துவக் கொள்கைகள் பற்றியதாகும்.    இவருடைய Tamil Language in Context: A Comprehensive Approach to Learning Tamil என்னும் நூலை உலகெங்கிலும் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் பலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.  வாசுவின் இரண்டாவது நூலாகிய “Computational Approaches to Tamil Linguisitics” என்னும் நூலை சென்னை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ் இலக்கியத் தரவுகளைக் கணினியில் உள்ளீடு செய்து (http://sangam.tamilnlp.com/) அவற்றைப் பயன்படுத்தி எப்படி தமிழ் ஆய்வைப் புதிய அணுகுமுறையில் செய்ய முடியும் என இந்நூல் விளக்குவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள திரு. அரங்கநாதன் இத்தலைப்புகளில் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். தமிழில் எழுதியுள்ள இவருடைய மூன்றாவது நூலான “இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்” என்னும் நூலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இலக்கிய உத்திகளை விரிவாக ஆயும் நூல் இது.  சங்ககாலந்தொட்டு மாறிவரும் தமிழ் மொழியையும் பல்வேறு இலக்கியங்களின் தாக்கங்களையும் வரலாற்று மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்ந்தறிவதையே வாசுவின் பல கட்டுரைகளும் நூற்களும் எடுத்தியம்புகின்றன.  இவருடைய சமீபத்திய நூல் “இக்காலத் தொல்காப்பிய மரபு”.  இந்நூலை சென்னையில் நியூசெஞ்சுரி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.  மேலை நாட்டு மொழி இலக்கணங்களையும் தொல்காப்பிய இலக்கணத்தையும் ஒப்பிட்டுத் தமிழ்மொழியின் இக்கால இலக்கணத்தை விளக்குகிறது இந்நூல்.

இணையப் பக்க முகவரி: https://www.sas.upenn.edu/~vasur/project.html

 

கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...