எம்மவர் மெல்லிசைப் பாடல்கள்
எம்மவர் மெல்லிசைப் பாடல்கள்
பாடியவர்- ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா .சத்தியமூர்த்தி
வரிகள்- நீலாவணன்
இசை- இசைவாணர் கண்ணன்
நீலாவணன் என்ற பண்பாட்டின் அழகியல்
---------------------------------------------------
---------------------------------------------------
1931ல் பிறந்த நீலாவணன் நமது இளைய தலைமுறை படிக்க வேண்டிய தமிழில் மிக
முக்கியமான படைப்பாளி. கல்முனையில் எழுத்தாளர் சங்கத்தை நிறுவி, அங்கு
அவரைச் சுற்றி ஒரு கவிதைக் குழுமத்தையே சிருஷ்ட்டித்தார்.
ஈழத்தின்
எந்தப் பிராந்தியத்திலும் அத்தனை கவிஞர்களைக் கல்முனையில்போல் காணமுடியாது.
அன்று அவ்வாறுதான் சேர்ந்திருந்தனர். தமிழர் முஸ்லிமென்ற ஒற்றுமை என்றும்
நீடிக்க அவரின் விரிந்து அகன்ற சிந்தனையின் எழுத்து விதைகள் பெரிதும்
உதவின. தமது சமூக வயலின் சம்பிரதாயங்களைச் சதையும் ரத்தமுமாகக் காட்டிய ஒரு
பொற்காலக் கவிஞர் அவர். இவரோடு நெருங்கியிருந்த எம்.ஏ. நுஃமான்,
மருதூர்க் கொத்தன், சண்முகம் சிவலிங்கம், மு.சடாச்சரம், பாவலர் பஸீல்
காரியப்பர், அன்பு முகையதீன் எனப் பலரையும் சொல்லலாம்.
11.01.1975 ல் மரணித்த நீலாவணன் அவர் விட்டுச் சென்ற படைப்புகள் கனவிலிருந்து எதையும் நினைவில் வைத்துக் கொள்ளாததுபோல் மாறி விட்டிருக்கின்றன. அவருடைய மிகப் பிரசித்தியான எள்ளலின் அழகியலான, "பாவம் வாத்தியார்" என்ற கவிதை எனக்கு நல்ல மனப்பாடமாக இருப்பதால் அதனை எனது நண்பர்கள் முதல் அவர் குடும்ப உறுப்பினர்கள் வரை உச்சாடனம் செய்திருக்கிறேன்.
பெரிய நீலாவணையில் பிறந்தவரான கேசப்பிள்ளை சின்னத்துரை ஊரில் கொண்ட அன்பால் நீலாவணன் ஆனார். இவருக்கு மொழி வாலாயப்பட்டதுபோல் இசையும் தெரிந்திருந்தது. இவர் எழுதிய - இவரை நினைவு கொள்ளும் "ஓ வண்டிக்காரா.." என்ற மெல்லிசைக் கீதம் ஒர் அனுபவமாகிறது.
கருத்துகள் இல்லை