கவிஞர் இளந்தேவன்
கவிஞர் இளந்தேவன்
இன்று கவியரசர் இளந்தேவன் உடல் எமை விட்டு பிரிந்த நாள் என்றும் அவர் கவிதைகள் எம் நினைவுகளுடன்...
“சொல்லை சிந்திப்பவன்
மரபுக் கவிஞன் ஆகின்றான்
பொருளை சிந்திப்பவன்
புதுக்கவிஞன் ஆகின்றான்
இரண்டையும் சிந்திப்பவன்
இளந்தேவன் ஆகின்றான்”
இவ்வாறு அறிமுகம் செய்வோர் இவ்வாறு கூறுவர்.
இவர் கவிதையின் சில பகுதிகள்:
“ஆற்றுக்கு நரைவிழுந்தால் கரையோரத்தின்
அருகம்புல் கைத்தடியாய் பற்றிக்
கொள்ளும்
கூற்றுக்கு நரை விழுந்தால்?? எருமை மாட்டுக்
கொம்புதனை கைத்தடியாய் பற்றிக்
கொள்ளும்”
போதையிலே சிலருக்குக் கவிதை தோன்றும்
பொடிமட்டை யால்சிலர்க்குக் கவிதை தோன்றும்
பாதையிலே தேர்போலப் போகும் பெண்ணை
பார்க்கையிலே பலபேர்க்குக் கவிதை தோன்றும்
வாதையிலே சிலருக்குக் கவிதை தோன்றும்
வருத்தத்தில் சிலபேர்க்குக் கவிதை தோன்றும்
ஏதெனக்குத் தந்தாலும் கவிதை தோன்றும்
இனிப்பொன்று தந்துவிட்டால் கவிதை தோன்றும்”
“கரையும் போது காக்கைகளுக்கு
வாயும் பிளக்கும் வாலும் பிளக்கும்”
மழலைப் பருவத்திலேயே மகள் இறந்தாள். பதின்வயதுகளில் ஒரு மகன் விபத்தில் இறந்தான்.
குழந்தையாய் இறந்த மகளைப் பற்றி
“பெண்கருப்பை இருட்டறைக்குள்
பிறைநிலவாய் வளர்ந்தவளே
மண்கருப்பை இருட்டறைக்குள் மறுபடி ஏன்
சென்றுவிட்டாய்;
சீறடியில் மண் ஒட்ட சினக்கின்ற நான்
தானா
ஈரடியில் குழிவெட்டி இறக்குதற்கு
சம்மதித்தேன்”
என்னும் அவரின் உருக்கமான கவிதை “கனவு மலர்கள்” தொகுதியில் இடம்பெற்றிருந்தது.
கருத்துகள் இல்லை