ANBUDAN APPA
Song : ANBUDAN APPA
Singer Chinmayi
Music:VM
Lyrics : Sharuthie Ramesh
என் அப்பா இல்லாத இடமில்ல
என் அப்பா இல்லாம நான் இல்ல
வானவில் போல அவர் முகம் பாக்க
கடலலை போல சிரிப்பத கேக்க
வானவில் போல அவர் முகம் பாக்க
கடலலை போல சிரிப்பத கேக்க
அவரில்லா உலகம் மௌனமாச்சு
அவரோட மூச்சு என் உசிராச்சு
அவரில்லா உலகம் மௌனமாச்சு
அவரோட மூச்சு என் உசிராச்சு
என் அப்பா இல்லாத இடமில்ல
என் அப்பா இல்லாம நான் இல்ல
எங்க குடும்பத்த நினைச்சு உழைச்சீங்க
கையுங் காச்சதை போக மறைச்சீங்க
உங்க அலக்குள்ள சிரிப்ப காணலெயே
அந்த சிரிப்பத்தான் வேறெங்கும் பார்க்கலெயே
காணாமலே கண் தேடுதே
அணையானதோ மனம் வாடுதே
ஆகாசத்த தினம் பாக்கிறேன்
அங்கே உங்க முகம் பாக்கிறேன்
என் அப்பா இல்லாத இடமில்ல
என் அப்பா இல்லாம நான் இல்ல
எங்க கதைகளைச் சொல்லிக் கேட்டோமே
புது இடங்களைப் பாக்க நடந்தோமே
வந்த கஸ்டத்தை மறந்து வாழ்ந்தோமே
உங்க பாசத்தை வளர்ப்ப மறந்தோமே
வருவீகளா? எனக்காக தான்
வருவீகளா? என்கூட தான்
தனியாகத்தான் புலம்புறேனே
தவிக்காமலே தவிக்கிறேனே
என் அப்பா இல்லாத இடமில்ல
என் அப்பா இல்லாம நான் இல்ல
உங்க மூச்சத்தான் காத்து திருடீருச்சா?
உங்க பேச்சத்தான் கடலும் பதுக்கிடிச்சா?
நான் உங்கள பாக்க எங்கே வர
என் உசிரையும்.......
நெஞ்சோடுதான் நான் சாயணும்
...............நான் தூங்கணும்
கோட்டை கட்டி தந்தீகளே
குருவி போல பறந்தீகளே
என் அப்பா இல்லாத இடமில்ல
என் அப்பா இல்லாம நான் இல்ல
கருத்துகள் இல்லை