' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

யாழ் தமிழ் பறை இசை

யாழ் தமிழ் பறை இசை

 பறை ஓர் சாதியல்ல. பறை ஒற்றை சாதிக்கான இசையல்ல. அது ஒட்டுமொத்த தமிழினத்தின் இசை. தமிழரின் பண்பாட்டு இசை.

பறை கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் ‘பறை’ பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. ‘பறை’ என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.

இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.

தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ 
அவ்வகை பிறவும் கருவென மொழிப
(தொல். அகத்திணையியல் - 18)
இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று பறை.

தொல்காப்பியர் கூறும் "பறை" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.




 


நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய வாழைவெட்டு திருவிழாவின் போது பறை வாசிக்கப்படுகிறது.

 வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் விழாவின்போது





புதூர் நாகதம்பிரான் கோவில் பொங்கல் திருவிழா காவடி


தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம் 
தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினோம்


London tamil Eelam parai song

 

 

'பறை – மனிதத்தின் குரல்'
PARAI- The voice of humanity
தமிழ்ச் சங்கத்தின்ஆதரவில் [28.10.2017] மேடையேற்றப்பட்ட 'பறை - மனிதத்தின் குரல்' நடனநாடகத்தின் முழுமையான காணொளி




Video: Vicknakumar, Maharasasingam, Tharmavanan
Music Composer: Hariharan Suyambu
Music arrangements & recording: Sunthar Kanesan
Violin: Athisayan Suresh
Costume design: VarathaLadchumy
Stage arrangment: Vishnusingam Kanapathipillai
Written by: Rooban Sivarajah
Choreography: Kavitha Laxmi
*காணொளிக்கென 'நடன நாடகம்' Rommen Sceneஇல் மீள நிகழ்த்தப்பட்டு, படமாக்கப்பட்டது!

மேலும் பறை பற்றி அறிந்துகொள்ள‌ 

சமகளம் இணைய தளத்தில்
ஆதித் தமிழினம் போற்றி வளர்த்த இசைக்கருவி ‘பறை’ கட்டுரையைப் படிக்கவும்.


கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...