' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே


படம் – சாட்டை
பாடலாசிரியர்- யுகபாரதி
இசையமைப்பாளர் – இமான்
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
அச்சம் என்பது எந்த நொடியும் நம்மை விழுங்கும் மறவாதே
உச்சம் என்பது எட்டும் வரையில் கண்கள் உறங்க நினையாதே
அறிவெனும் ஆயுதம் நமதுயிர் காக்குமே போரை ஏற்போமே
தடைகளை மீறினால் அரியணை ஏறலாம் ஒரு கை பார்போமே
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
உண்மை என்பது நம்மை தொடரும் உள்ள வரையில் துணிவோமே
நம்பி செய்திடும் எந்த செயலும் நன்மை பயக்கும் அறிவோமே
தெளிவுடன் தேடினால் எதனையும் காணலாம் பாதை மாறாதே
ஒரு முறை தேறினால் தலைமுறை வாழுமே வேர்வை காயாதே
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...