' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள்

 பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள்


 

  பாடல் ஒலிப்பதிவின்போது

 
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும் !

அன்பு வேண்டும்!
அறிவு வேண்டும்!
பண்பு வேண்டும்!
பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்!
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழுத வேண்டும்!
சர்க்கரைத் தமிழள்ளித் தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்
பிறந்த நாள் வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
பிறந்தநாள் வாழ்த்துகள்

பாடல்: பாவலர் அறிவுமதி

இசை : அரோல் கரோலி

குரல் : உத்ரா உன்னிகிருஷ்ணன்

தயாரிப்பு: ச.பார்த்தசாரதி

 


னிக்க இனிக்க வாழ்த்துவோம்…
இனிக்க இனிக்க வாழ்த்துவோம்…
தமிழிலினிக்க மொழியும் சிறக்க –
பிறந்தநாளில் வாழ்த்துவோம்;
பிறந்தநாளில் வாழ்த்துவோம்;

வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே…

கற்கண்டுச் சிதறலாய் –
சிரிக்கும் சிரிப்பு இனிக்கட்டும்,
சொட்டும் தேன் இனிமையில்
சொற்களெல்லாம் இனிக்கட்டும்;

கனுக்கரும்பின் இனிமையாய்
வாழ்க்கையது நொடிக்கட்டும்,
புகழைக் கூட கசக்காமல்
பிறர் வாயேப் பேசட்டும்;

பொற்காலம் இதுவென்று நீ
வாழும் காலம் ஆகட்டும்,
புதையல்போலுன் மனதென்று
பார்ப்போரெல்லாம் மெச்சட்டும்;

தரணி முழுக்க தமிழ்போல
உன் பேருமது சிறக்கட்டும்,
பெருமையோடு உலகம் பேச – முழுப்
பக்குவமும் கிடைக்கட்டும்;

செல்வம் பல செழிக்க – நீயும்
பெருநிறைவோடு வாழனும்
சேர்த்துவைக்கும் சுகத்தோடு
நல்ல பேரும் நிலைக்கனும்;

பெரியோரை மதிக்கணும் – பேணிப்
பிள்ளையைப்போல் காக்கனும்
மற்றோரையும் மதிக்கணும் – பெண்ணின்
மாண்பு உயர நடத்தனும்;

மகிழ்ச்சிப் பொங்கும் நாளிலும்
கர்வமின்றித் திரியனும்,
கடலளவுப் பணிவிலே –
இவ்வுலகப் பார்வை அடங்கனும்;

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் எல்லோரும்
வாழ்த்துவோம்;
சிரித்து சேர்ந்து வாழ்த்துவோம்
மனசு குளிர வாழ்த்துவோம்
மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம்
மகிழ்வுபொங்கும் நன்னாளில் –

பல்-லாண்டு வாழ வாழ்த்துவோம்;
வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே…

வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே..

பாடல்: வித்யாசாகர்

 

பிறந்த நாள் ! –
இனிய பிறந்த நாள் !
பிறந்த நாள் ! –
இனிய பிறந்த நாள் !
மீண்டும் வர வேண்டும் இந்தப் பிறந்த நாள் !
 மேன்மை தர வேண்டும் இந்தப் பிறந்த நாள் !
 இன்பம் பொங்கும் வளமை தரும் பிறந்த நாள் !
இன்று போல இளமை தரும் பிறந்த நாள் !
பிறந்த நாள் ! –
இனிய பிறந்த நாள் !
பிறந்த நாள் ! –
இனிய பிறந்த நாள் !
பிறந்த நாள் !
 

 
"வாழ்க வாழ்க
நீண்ட நாட்கள் வாழியவே
நலமும் வளமும் வாழ்வில் பெற்று
வானமாய் வாழியவே
நோயும் பகையும் இல்லாமல்
நெடுநாட்கள் வாழியவே
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
அருள்பெற்று வாழியவே
இதுபோல் பிறந்த நாட்கள் பலவும்
இனியும் வந்திடவே
இன்றுபோல் என்றும் இன்முகத்தோடு
இருந்திட வாழ்த்துகிறோம்
வாழ்க்கை சிறந்திட வாழ்த்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க
நீண்ட நாட்கள் வாழியவே!"
 
 


 
 
 
 
 


கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...