' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

Palindrome இருவழிச் சொற்கள் (மாலைமாற்று)

Palindrome மாலைமாற்று 

மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) என்பது பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும்.
 
முழுக்க முழுக்க மாலைமாற்றுச் சொற்களால் அமைக்கப்பட்ட ஒரு தமிழ்ப்பாடல் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டு மகிழுங்கள். பகிருங்கள்.
 
 
 
 
 
மேக ராகமே மேள தாளமே
மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா

தோணாதோ
கான கனகா

வான கனவா
வாச நெசவா
மோகமோ
மோனமோ

பூ தந்த பூ
தீ தித்தி தீ
வா கற்க வா

போ சீ சீ போ
தேயாதே
வேல நிலவே

மேக ராகமே
மேள தாளமே
ராமா மாரா

சேர அரசே
வேத கதவே
நேசனே வாழவா

நீ நானா நீ
மா மர்மமா
வைர இரவை
தைத்த விதத்தை
தேடாதே
மேக முகமே

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா

கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா

மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா

தோணாதோ
கான கனகா

மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா
 
 

திருமாலைமாற்று திருப்பதிகம் | சீர்காழி | யாமாமாநீ யாமாமா யாழீகாமா | திருஞானசம்பந்த சுவாமிகள்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா 
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. ..... (01)
 
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா 
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. ..... (02)
 
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா 
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. ..... (03)
 
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே 
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. ..... (04)
 
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ 
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா. ..... (05)
 
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே 
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே. ..... (06)
 
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே 
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ. ..... (07)
 
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா 
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே. ..... (08)
 
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ 
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. ..... (09)
 
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே 
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. ..... (10)
 
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா 
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. ..... (11)
 

கருத்துகள் இல்லை