' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு


 திரைப்படம் – ஆண்டவன் கட்டளை
பாடல் – ஆறு மனமே ஆறு
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்

இசை பல்லவி

ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு ( இசை )
ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

இசை சரணம் - 1

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி ( இசை )

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி ( இசை )

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் ( இசை )
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் 
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

இசை சரணம் - 2

உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் ( இசை )

நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும் ( இசை )

உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும் 
உண்மை என்பது அன்பாகும் பெரும்
பணிவு என்பது பண்பாகும் ( இசை )

உண்மை என்பது அன்பாகும் பெரும்
பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

இசை சரணம் - 3

ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம் ( இசை )

அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் ( இசை )

இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் 
தெய்வம் என்பது பிள்ளை மனம் ( இசை )
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு... ( இசை )

 

கருத்துகள் இல்லை