' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நித்தம் நித்தம் மாறுகின்ற

நித்தம் நித்தம் மாறுகின்ற

திரைப்படம்: பந்த பாசம்
பாடகர்: சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் * ராமமூர்த்தி
பாடலாசிரியர்: மாயவநாதன் 

இசை பல்லவி

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 

இசை சரணம் - 1

புரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது
திரை விழுந்தது ( இசை )

புரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது
காதல் கதையில் பாதி நடக்கும் போது
திரை விழுந்தது 
தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது
கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 

இசை சரணம் - 2

இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது ( இசை )

இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று
கடமை என்றது 
காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது
என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்
வாழ்க்கை என்பது
என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்
வாழ்க்கை என்பது

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 

இசை சரணம் - 3

தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க
நின்றது ஒன்று ( இசை )

தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க
நின்றது ஒன்று 
இதற்க்கிது தான் என்று முன்பு யார் நினைத்தது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது

நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ...
 
கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...