' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இந்த வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது






இந்த வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது
அத நாம வாழ்ந்துகிட்டு இருக்கிற விதம் வித்தியாசமானது
உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் இருந்தா
நாம் வாழ்ந்துகிட்டு இருக்கோம்னா அர்த்தம்...


நல்ல வேலை கை நிறைய சம்பளம் சந்தோஷமான குடும்பம்னா
நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம்னா அர்த்தம்...


ஆனால் அதுவே எல்லோருக்கும் சுலபமாக கிடைப்பதில்லை. ...
வாழ்வதே கஷ்டம்னா.? கடமைகளை  எப்படி முடிக்கிறது
கனவை எப்படி அடைகிறது போட்டியை எப்படி ஜெயிக்கிறது
லட்சியத்தை எப்படி சாதிக்கிறது...
பொய்யால வேலைய முடிக்கிறவங்க
நம்ம பயத்தால எல்லாத்தையும் அடையிறவங்க
நல்லவன் மாதிரி ஏமாற்றி ஜெயிக்கிறவங்க
பணத்தால் எல்லாத்தையும் சாதிக்கிறவங்க இருக்கிற இந்த வாழ்க்கையில
விதி மேல பழியபோட்டு கடவுள் மேல பாரத்த போட்டு
முன் வச்ச கால நாம பின் வச்சோம்னா

நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம்னா அர்த்தமா???????


உன் வாழ்க்கை அவ்வளவுதான்
இந்த உலகம் உன்னிடம் சொல்லும் போது
உன் வாழ்க்கை உன் கையில்தானு
உன் அறிவு சொல்றது உங்களுக்கு
கேட்கவில்லையா?
உன் அளவுக்கு நீ ஆசைபடுனு இந்த சமுதாயம்
உன்னை அமுக்கும் போது
தன்னம்பிக்கையோடு போராடுனு
உங்கள் மனசாட்சி சொல்றது
கேட்கவில்லையா?
இன்னைக்கு ஒரு முடிவு எடுங்க அதை
என்றைக்கும் மறக்காதீங்க
தோல்வி பயம் துரத்தும்
திரும்பி பார்க்காதீங்க
போதும்னு மனசு சொல்லும்
வருகிற‌ வாய்ப்ப விட்டுறாதீங்க
தேடுனாதான் கிடைக்கும்
தட்டுனாத்தான் திறக்கும்
உங்க பயத்தைப் பார்த்து தைரியமாக
ஒன்னே ஓன்று சொல்லுங்கள்
என் உரிமைய
முடிஞ்சா பறிச்சுபார்
நான் முன்னேறுவேன்
முடிஞ்சா என்னைத் தடுத்துப்பார்
கண்ணுல நெருப்போட
களத்துல வெறியோட
உங்க அறிவையும் தன்னம்பிக்கையும்
நம்பி உங்க லட்சியத்தை நோக்கி
தைரியமாக அடுத்த அடி எடுத்து வச்சா. ....
நீங்க வாழ்ந்துகிட்டு இருக்கீங்கன்னு
அர்த்தம்.............

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...