' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நெல்லையில் லெனின் சிலை திறப்பு விழா

நெல்லையில் லெனின் சிலை திறப்பு விழாவில் தேசத்தின் அச்சுறுத்தல் காவி பயங்கரவாதம் அல்லது கார்ப்ரேட் சுரண்டலா என்ற தலைப்பில் நடுவராக கவிஞர் மதுக்கூர் ராமலிலிங்கம் தலைமையில் நடைபெற்ற வழக்காடுமன்றம்.


 
பாரதிதாசன் லெனினைப் புகழ்ந்து பாடல் இயற்றியுள்ளார்.

அப்பாடல் வரிகளாவன:

யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்
         உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின்
         அரசாள வந்த லெனினே!
சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின்
         சுதந்திர மான லெனினே!
இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின்
         இறையாகி வந்த லெனினே!
நறவூறுகின்ற மொழி பொருளர்க்கும் என்றவ்ழி
         நடை கொண்டு வந்த லெனினே!
உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி
         உரமாக்கி வைத்த லெனினே! (11)

இப்பாடலை, பாரதிதாசன் பாரதியோடு புதுவையிலிருந்த போதே, 1918 பிப்ரவரி மாதத்தில் ‘ஜனவிநோதினி’ எனும் ஏட்டில் எழுதியுள்ளார்

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...