' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தன் நம்பிக்கை உனக்கிருந்தால்

 

தன் நம்பிக்கை உனக்கிருந்தால் 

 

படம்: பந்தயப்புறா
பாடகர்: சித்ரா
இசை: ஹித்தேஷ்
இயக்குனர்:புவன்
நடிகர்கள்:பஜ்ரங்,ஐரதி
 
 
தன்னம்பிக்கை உனக்கிருந்தால்
மனிதா நீதான் கடவுளடா.
நல்லதை நீ செய்தால்
உன்னை உலகம் வணங்குமடா.

பிறப்பது ஒரு முறைதான் 
மனிதா நினைத்ததை நடத்திடடா.

இறப்பது விடுமுறைதான் 
நீ இங்கு அதற்குள் ஜெயித்திடடா..


தன்னம்பிக்கை உனக்கிருந்தால்
மனிதா நீதான் கடவுளடா.
நல்லதை நீ செய்தால்
உன்னை உலகம் வணங்குமடா.

பிறப்பது ஒரு முறைதான் 
மனிதா நினைத்ததை நடத்திடடா.

இறப்பது விடுமுறைதான் 
நீ இங்கு அதற்குள் ஜெயித்திடடா..
உன்னை சுற்றித்தானே
இந்த பூமி சுழல்கிறது. 
உன்முகம் பார்த்திடத்தானே 
தினமும் சூரியன் உதிக்கிறது.

தன்னம்பிக்கை உனக்கிருந்தால் 
மனிதா நீதான் கடவுளடா.
நல்லதை நீ செய்தால்
உன்னை உலகம் வணங்குமடா.

சின்ன குழந்தையாய்
பூமியில் பிறந்து
நான்கு கால்களால்
முதலில் தவழ்ந்து
நம்பிக்கை ஊன்றி எழுந்து
நிலவில்  நடக்குதடா.

உனது கண்களில்
வெளிச்சங்கள் இருக்கு
இருட்டை கண்டுதான்
பயம் என்ன உனக்கு.

அச்சம்தான்
மனிதனை தாக்கும்
உயிர்கொல்லி நோயாகும்.
நாளை நாளை என
வாழ்ந்திடவே நாம்
இந்த‌ நிமிடத்தில் நீ நடைபோடு.

காலம் தான் கைவிட்டு போகும் 
அதை நீ எடை போடு . 
புல்லும் கூட இங்கு மண்ணை 
கீறிக்கொண்டு உலகில்  எழுகிறது.

தரையில் விழுந்த துளி  
எழுந்து நடந்து சென்று 
கடலாய் விரிகிறது.

மனிதன் என்ற 
ஒரு ஜீவன் மட்டும் 
இங்கு முயன்றிட மறுக்கிறது 
முட்டி மோதியே வெற்றி 
பெற்றுவிடு வழிகள் இருக்கிறது.

தன்னம்பிக்கை உனக்கிருந்தால்
மனிதா நீதான் கடவுளடா.
நல்லதை நீ செய்தால்
உன்னை உலகம் வணங்குமடா.

உள்ளங்கையிலே
ரேகைகள் எதற்கு
ஜோசியம் பார்க்கவா
அது இங்கு இருக்கு.

ரேகைகள் தேய்ந்திட
உழைத்தால் வெற்றிகள்
உன் கையில்.

புல்லாங்குழலுக்கு 
எத்தனை துளைகள் 
வாழ்வில் தாங்கிடு 
 வேதனை வலிகள் 

சிந்தும் உன் கண்ணீர்த் துளிகள் 
 எல்லாம் முத்தாகும்.

சோகம் சோகம் 
என்று சொன்னது போதும் 
மனதில் அதற்கு இங்கு
நீ  தடை போடு.

முன்னாள் நீ வைத்த கால்களை 
பின்னால் வைக்காதே.

சொத்து சுகங்கள் 
அது தொலைந்து போகும் 
நம்பிக்கை தொலைக்காதே.

உனது வியர்வை துளி 
லட்சம் கோடி பெறும் 
வைரமும் ஜெயிக்காதே.

முயற்சி என்ற ஒரு சிறகை 
கட்டிகொண்டு உயரே 
பறந்திடலாம்

வானம் என்ன, 
அந்த கோள்கள் தாண்டி சென்று 
பெயரை எழுதிடலாம்

தன்னம்பிக்கை உனக்கிருந்தால்
மனிதா நீதான் கடவுளடா.
நல்லதை நீ செய்தால்
உன்னை உலகம் வணங்குமடா.

கருத்துகள் இல்லை

தமிழோடு உறவாடு

  செல்வேந்திரன் அளித்த அசத்தலான பயிற்சி 15.12.2025     22.12.2025   29.12.2025       05.01.2026  12.01.2026 19.01.2026 இறுதிச்சுற்று   28....