' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

எதுவும் நிரந்தரம் இல்ல

இன்று பிரிவு என்பது மிகவும் சாதாரணமாகிக் கொண்டு வருகின்றது.  இப்போ எதுவும் நிரந்தரம் இல்லை என்று உணரும் காலம் என்று எண்ணுகிறேன். இதனைக் கூறி மனதை ஆற்றிக் கொள்வோம். வேறு என்ன சொல்ல.

கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
கட்டையில போற வரையில் சுதந்திரம் இல்ல
இங்கு சுதந்திரம் இல்ல
எதுவும் நிரந்தரம் இல்ல
 
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
 
நெனச்சு நெனச்சு பாத்தாக்கா நீயும் கொஞ்ச காலம்
உன் நெனைப்பும் கொஞ்ச காலம்
சரித்திரத்து மன்னர்களும் கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரரும் சூரியரும் இன்னும் கொஞ்ச காலம்
 
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
 
எட்டாத மல மேல கடவுள் இருக்குது
அத எட்டிவிட மனுஷபைய இதயம் துடிக்குது
சொந்த பந்தம் ஓடி வந்து கால இழுக்குது
அட சொத்து பத்து ஆசை வந்து கைய அமுக்குது
காமம் வேற கடைசி வரைக்கும் கழுத்த புடிக்குது
காமம் வேற கடைசி வரைக்கும் கழுத்த புடிக்குது
இதில் கடவுள் கிட்ட போற வழி எங்க இருக்குது
கட்டையில போற வரைக்கும் சுதந்திரம் இல்ல
கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
 
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
 
முப்பதுக்கு மேல உனக்கு முடி உதிருது
அட நாப்பதுக்கு மேல பார்வை அடுக்கமாகுது
அம்பதுக்கு மேல பல்லு ஆடிப்போகுது
அறுபதுக்கு மேல ஆண்மை அடங்கி போகுது
உடம்போட பொறந்ததெல்லாம் உன்ன பிரியுது
உடம்போட பொறந்ததெல்லாம் உன்ன பிரியுது
இதில் உன்கூட பொறந்ததுவா இருக்க போவுது
 கட்டையில போற வரைக்கும் சுதந்திரம் இல்ல
கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
 
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
 
நெனச்சு நெனச்சு பாத்தாக்கா நீயும் கொஞ்ச காலம்
உன் நெனைப்பும் கொஞ்ச காலம்
சரித்திரத்து மன்னர்களும் கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரரும் சூரியரும் இன்னும் கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச காலம் 

 திரைப்படம்: கங்காரு (2014)
இசை: ஸ்ரீனிவாஸ்
பாடியவர்: ஹரிகரசுதன்
எழுதியவர்: வைரமுத்து

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...