' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல

 

ஆண்: வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

ஆண்: வழி நெடுக காட்டுமல்லி…

பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா

பெண்: வழி நெடுக காட்டுமல்லி…

ஆண்: கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெண்: கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சு வாழ்ந்தில்ல

ஆண்: மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகுற நெனவுகளே
பெண்: ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

ஆண்: காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க

பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
ஆண்: காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

பெண்: கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல
ஆண்: நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

பெண்: ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
ஆண்: இரு சிறு உசுரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது

பெண்: சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்

பெண்: வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
ஆண்: எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள

பெண்: பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
இருவரும்: வழி நெடுக காட்டுமல்லி…

 

 

பாடல்:வழி நெடுக காட்டுமல்லி
படம்:விடுதலை பாகம்-1
வருடம்:2023
இசை:இளையராஜா
வரிகள்:இளையராஜா
பாடகர்:இளையராஜா, அனன்யா பட்












கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...