' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

  Home

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 யூலை 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதத்திற்கும் 12.00 சதவீதத்திற்கும் 200 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவான பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறை மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பன உள்ளடங்கலாக தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் உன்னிப்பான பகுப்பாய்வொன்;றினைத் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டு பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதனை இயலுமைப்படுத்துவதனையும் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதிநிலைப்படுத்தும் வேளையில் நிதியியல் சந்தைகளிலுள்ள அழுத்தங்களைத் தளர்த்துவதனையும் நோக்காகக் கொண்டது. 200 அடிப்படைப் புள்ளிகளினால் கொள்கை வட்டி வீதங்களில் மேற்கொள்ளப்பட்ட இக்குறைப்பு மற்றும் அரச பிணையங்கள் மீதான இடர்நேர்வு மிகையில் அண்மையில் பதிவுசெய்யப்பட்டவாறான குறிப்பிடத்தக்க குறைவுடன் இணைந்து 2023 யூன் முற்பகுதியில் 250 அடிப்படைப் புள்ளிகளினால் கொள்கை வட்டி வீதங்களில் மேற்கொள்ளப்பட்ட குறைப்பு என்பவற்றுடன் சந்தை வட்டி வீதங்கள் குறிப்பாக, கடன்வழங்கல் வீதங்கள் போதியளவாலும் விரைவாகவும் கீழ்நோக்கிச் சீராக்கப்படுமென சபை எதிர்பார்க்கின்றது. ஆதலால், மத்திய வங்கியின் மூலமான நாணயக் கொள்கையின் இக்குறிப்பிடத்தக்க தளர்த்தலின் நன்மைகளைத் தனிப்பட்டவர்களுக்கும் வியாபாரங்களிற்கும் ஊடுகடத்துவதுடன் அதன்மூலம் எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் மீளெழுச்சியடைவதற்கு ஆதரவளிக்குமாறு வங்கித்தொழில் மற்றும் நிதியியல்துறை  வலியுறுத்துகிறது.


 

 


 

Quelle:  https://www.cbsl.gov.lk

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...