' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மகாகவி பாரதி கூறிய மரணத்தை வெல்லும் வழி

 

செப்டம்பர் 11: மகாகவி பாரதியார் 

நினைவு

 பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீரிவ்வுண்மை, பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானு டர்க்கே,
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.
 

 
 
  
 
மரணத்தை வெல்லும் வழி
 
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்;
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரைத்த தன்றிச் செய்கையில்லை.
அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார். 
 
பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதியை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றேயங் கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை:
நோவாலே மடிந்திட்டான் புத்தன்; கண்டீர்
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்; 
 
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர்புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீரிவ்வுண்மை, பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானு டர்க்கே,
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.
 
 
 தன்னை தனிப்பட்ட உடல், மனம், ஆசைகள் எனக் கருதாமல்,
"நான் பிரம்மம் தான், எல்லாமே நானே" என்று உணரும் நிலைதான் அத்வைத நிலை.

கருத்துகள் இல்லை

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

  கொக்குவில் கலாபவனம்  கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி  செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின்  பரதநாட்டிய அரங்கேற்றம்...