' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

கடவுள் ஏன் கல்லானான்

கடவுள் ஏன் கல்லானான்

 

  

பாடல் : கடவுள் ஏன் கல்லானான்
திரைப்படம் : என் அண்ணன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன்
இயற்றியவர் : கண்ணதாசன்
திரையிசை : K.V.மகாதேவன்

 

கடவுள் ஏன் கல்லானான் –
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
(கடவுள்)
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் – அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
(கடவுள்)
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி –
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி –
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
(கடவுள்)
சதி செயல் செய்தவன் புத்திசாலி –
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் –
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் –
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
(கடவுள்)

கருத்துகள் இல்லை

எழுதுவது எப்படி?

 எழுதுவது எப்படி?   எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்   புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட...