' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

குடும்பத்தைப் பிரிந்து, ஆதரவற்ற நிலையில் அல்லாடி வரும் கவிஞர் உதயகுமார்


பருத்தி என்றொரு செடிவளர்ந்தது பருவப் பெண்ணைப் போலே
அந்தக் கரிசற் களனி மேலே
அதைப் பிரித்து எடுத்துப் பார்க்கும் போது பஞ்சுக்குவியல் ஆச்சு.
முல்லை பார்க்கப் பயணம் போச்சு
அதைத் திரித்து எடுத்துப் பார்க்கும் போது சின்ன இளைகள் ஆச்சு
நூல் என்னும் பெயருண்டாச்சு
அழகுவர்ணம் கலந்து நெய்ததில் ஆடை வந்தது மெல்ல‌
உடல் மூடி மறைத்துக் கொள்ள‌
இடை குலையும் மாதர் இடையில் ஏறி கோலக் கவிதை சொல்ல‌
அந்தத் துணியில் ஒன்று கிளிந்து அடுப்பாங்கரைக்கு வந்து
தான் படிக்குது இன்று சிந்து
நிலை தாழ்ந்த போது மனிதர் கூட உடைந்த பானைசட்டி
வாழும் நாளில் வாழ்ந்த என்னை வைத்த இரும்புப் பெட்டி
இன்று உதைக்கும் என்னை எட்டி
நிலை தாழ்ந்த போதும் மனிதர் கூட உடைந்த பானைசட்டி
யார் உறவு கொள்வார் ஒட்டி
இந்தச் சோற்றுப்பானை சட்டி தூக்கி இறக்க வந்தேன்
என் தூய உடலைத் தந்தேன்.


என்று ஓர் கந்தல் துணி மனிதனுக்கு அறிவு சொல்லிச்சாம்.
சாலையோர கவிஞர் உதயக்குமார்







கருத்துகள் இல்லை

Open-Air-Sommerkino auf der Dachterrasse mit Skyline-Blick.

  Ein kleines Stück vom Kuchen Ort :                                    Frankfurt...