' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தோட்டக்கார சின்ன மாமா

தோட்டக்கார சின்ன மாமா

 

'தோட்டக்கார சின்ன மாமா'... 

மாதவி (1959) 

பாடலாசிரியர் : கவி கா மு செரீப் 

இசை : கே வி மகாதேவன் 

பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் & எம் எஸ் ராஜேஸ்வரி

 
 
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே

தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோகை மயிலே எந்தன் கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா

ஆசை கொண்ட மங்கை யோடு
ஆயுள் பூரா வாழ வேண்டும்
ஆசை கொண்ட மங்கை யோடு
ஆயுள் பூரா வாழ வேண்டும்
மோசம் நீயும் செய்திடாதேடா
என் ஆசை மாமா
வாழ்வில் என்னை மறந்திடாதேடா
என் ஆசை மாமா
வாழ்வில் என்னை மறந்திடாதேடா

கவலை நீயும் அடையலாமோ
கலக்கம் வீணே கொள்ளலாமோ
கவலை நீயும் அடையலாமோ
கலக்கம் வீணே கொள்ளலாமோ
உன்னை நானே என்றும் மறவேனே
என் ஆசை மானே
ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே
என் ஆசை மானே
ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே

தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோகை மயிலே எந்தன் கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா

தாயும் இல்லை தந்தை இல்லை
வேறு எனக்கு கெதியும் இல்லை
தாயும் இல்லை தந்தை இல்லை
வேறு எனக்கு கெதியும் இல்லை
நானும் உன்னை நம்பி வந்தேனே
என் ஆசை மாமா
நாளும் உனக்கே அடிமையாவேனே
என் ஆசை மாமா
நாளும் உனக்கே அடிமையாவேனே

ஆசையாலே பாசத்தாலே
அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
ஆசையாலே பாசத்தாலே
அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
பேசி பேசி இன்பம் கண்டிடுதே
என் ஆசை மானே
பிறவி பயனை இன்று கண்டோமே
என் ஆசை மானே
பிறவி பயனை இன்று கண்டோமே

தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே

கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...