' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

கவிஞர் மு .மேத்தா இன்னிசை மழை

 கவிஞர் மு .மேத்தா


பிறப்பு – 05.09.1945 , ஊர் – பெரியகுளம் , தேனி மாவட்டம்

·         இயற்பெயர் – முகமது மேத்தா .
 
          இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள்
·         
         ‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
 
·         சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
 
·         ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்குபுகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
 
 (      (கவிதையிலிருந்து சில பகுதிகள்)

உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன
நீயேன்
தலைகுனிந்தபடி
நிற்கிறாய்?

தேசப் படத்திலுள்ள
கோடுகள்
விடுதலைக்குப் போராடிய
வீரத் தியாகிகளின்
விலா எலும்புக் கூடுகள்!

அமுதசுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் !

இந்த மாற்றத்தை
நிகழ்த்திய
மந்திரவாதிகள் யார்?

நிழலுக்குள் மறைந்திருக்கும்
நிழலை
யார் அம்பலப்படுத்துவது?

மயிலுக்கு போர்வை தந்தவனின்
மரபில் வந்தவர்கள்
எங்கள் மேனியில் கிடக்கும்
கந்தல் சட்டைகளையும்
கழற்றிக் கொண்டு போகிறார்கள்

ஆடுகள்
உனக்காக வளர்த்தோம்
நாளடைவில் நாங்களே
மந்தை ஆடுகளாய்
மாறிப் போனோம் !

எங்கள்
வயிற்றைப் புறக்கணித்துவிட்டு
காம்புகளை நேசிக்கிறார்கள் !

எங்களுக்குத்
தீவனம் கிடைக்காவிட்டாலும்
மேய்ப்பவர்களுக்கு மட்டும்
எப்படியோ
இனாம் கிடைத்து விடுகிறது !

நீ கண்டுபிடித்த
சுதேசி ஆயுதமாம்
கைராட்டையை சுற்றிய சிலர்
தங்கநூல் நூற்கிறார்கள் !

எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயர்களில்தான்
வருகின்றன

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இந்த நாட்டுமக்கள்
உன்னை
அப்படியே பின்பற்றுகிறார்கள்
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்.
 
 
·         இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது .
·         ‘சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
 
·         தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதினை பெற்றுள்ளார் .

இவர் எழுதிய ஆகாயத்தில் அடுத்தவீடு – சாகித்திய அகாதமி வென்ற நூல்

 


 

 

34 இலக்கிய படைப்புகள் ,400 திரைப்படப்பாடல்கள் என்று இலக்கிய ஆர்வலர்கள் மத்தியிலும் ,உலகெங்கிலும் தமிழ் பேசும் இதயங்கள் தோறும் காற்று மண்டலத்தையே கற்கண்டு மண்டலமாக மாற்றும் பல இனிய பாடல்களோடு தொடரும் கவிவேந்தர் மு .மேத்தா அவர்களின் இனிய அனுபவப் பகிர்வு

 

கவிஞர் மு .மேத்தா இன்னிசை மழை பாகம் 1
 


கவிஞர் மு .மேத்தா இன்னிசை மழை பாகம் 2
 
 
 
 
கவிஞர் மு .மேத்தா இன்னிசை மழை பாகம் 3
 

 
 
 கவிஞர் மு .மேத்தா இன்னிசை மழை பாகம்4
 

 
படித்ததில் பிடித்தது நேர்காணல் தோழர் கணேஷ்பிரபு  கவிஞர் மு.மேத்தா
 

 

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...