' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தமிழி

 

தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துக் கல்வெட்டுகள்

இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து தமிழ்–பிராமி, அசோகன்-பிராமி, வடஇந்திய-பிராமி, தென்னிந்திய-பிராமி, சிங்கள–பிராமி என்று வகைப்படுத்துப்பட்டுள்ளது. இன்று இந்திய நாட்டில் உள்ள எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி அடைந்து வந்தவையே. மேலும் அகழாய்விலும், கள ஆய்விலும் அறியப்பட்ட பானை ஓடுகளிலும் ஆற்றுப் படுகைகளில் சேகரிக்கப்பட்ட காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் ஆகியவற்றில் தமிழ்–பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன.

தமிழ்–பிராமி கல்வெட்டுகள் ஏறத்தாழ தமிழகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன. கடல் கடந்த வணிகத் தொடர்பு காரணமாக சில பானை ஓடுகள், ஓர் உறைகல் ஆகியவை ஆட்பெயர்களுடன் எகிப்து, தாய்லாந்து ஆகிய இடங்களில் அண்மையில் அறியப்பட்டுள்ளன.

தமிழ்-பிராமி கல்வெட்டுகள் முற்காலத் தமிழ்-பிராமி, பிற்காலத் தமிழ்-பிராமி என கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான கால எல்லையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன

 

 பாகம் 1  அசோகன்-பிராமி

 
 
 பாகம் 2 தமிழ்–பிராமி

 பாகம் 3 தமிழ் ஆராய்ச்சிக்கு

 பாகம்4
 
 
 


 


 

கருத்துகள் இல்லை

எழுத்தாளர் ஒன்றுகூடல் 2024

  please note the corrections of time Australia: 8 p.m. (20:00) UK: 9:00 a.m. France/Germany: 10:00 a.m.   Zoom Meeting ID: 85157858332 Pas...