' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்

என்றன் கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து கவலை மிகுந்தாலும்

வாழ்வு கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து கீழ்நிலை யுற்றாலும் மன்னர் தொட்டு வளர்த்த தமிழ் மகளின்துயர் துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து நுடங்கி விழுந்தாலும்
ஓலைப் பாயில் நெளிந்து மரண மடைந்து பாடையில் ஊர்ந்தாலும்

காட்டுத் தீயில் அவிந்து புனலில் அழிந்து சிதைந்து முடிந்தாலும்
என்றன் தாயின் இனிய தமிழ்மொழியின் துயர் தாங்க மறப்பேனா?

பட்ட மளித்து பதவி கொடுத்தொரு பக்கம் இழுத்தாலும்
ஆள்வோர் கட்டி அணைத்தொரு முத்மளித்து கால்கை பிடித்தாலும்
பட்ட மளித்து பதவி கொடுத்தொரு பக்கம் இழுத்தாலும்
ஆள்வோர் கட்டி அணைத்தொரு முத்தமளித்து கால்கை பிடித்தாலும்

எனைத் தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர் தோழமை கொண்டாலும்
அந்த வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை வீழ்த்த மறப்பேனா

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்
என்றன் கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து கவலை மிகுந்தாலும்
வாழ்வு கெட்டு நடுத்தெருவோடு கிடந்து கீழ்நிலை யுற்றாலும்
மன்னர் தொட்டு வளர்த்த தமிழ் மகளின் துயர் துடைக்க மறப்பேனா

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்
என்றன் கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து கவலை மிகுந்தாலும்

பாடல் வரிகள்: கவிஞர் காசி ஆனந்தன் 

பாடியவர்: தேனிசை செல்லப்பா

கருத்துகள் இல்லை

Open-Air-Sommerkino auf der Dachterrasse mit Skyline-Blick.

  Ein kleines Stück vom Kuchen Ort :                                    Frankfurt...