' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ராகுல சாங்கிருத்தியாயன் நினைவு நாள் இன்று.

 

  ( 9.04.1893 - 14.04.1963)

இந்திய  பயண இலக்கியத்தின் தந்தை என்றும் ராகுல்ஜி என்றும்  எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும்  மகா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்கள் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே ஆகும்.
10 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுற்றி ஏராளமான விஷயங்களைக் கற்றார்.
தமிழகம் வந்து இவர் சைவ, வைணவ நூல்களைக் கற்றார். தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் இவரது அறிவு விரிவடைந்தது.

இலங்கை முதல் லண்டன் வரை பயணம் மேற்கொண்டார். இந்தி, பாலி, உள்ளிட்ட பல இந்திய மொழிகளையும், சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி உள்ளிட்ட அயல்நாட்டு மொழிகளையும் கற்றார். புகைப்படக் கலையிலும் வல்லவராக இருந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். பல முறை சிறை சென்றுள்ளார்.


இவர் எழுதிய நூல்கள் தமிழ், தெலுங்கு மலையாளம் உட்பட மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது
பல்வேறு துறைகளில் ஏறக்குறைய 150 புத்தகங்களை எழுதியுள்ளார்.
1958இல் சாகித்ய அகாடமி விருது, 1963 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளும், மகாபண்டிட் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். தனது வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்த ராகுல் சாங்கிருதியாயன் 1963ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் தேதி தனது 70வது வயதில் காலமானார்.

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...