' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மீன் பாடும் தேன்நாட்டில் கொட்டிக்கிடக்கும் அழகு

 

ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ        
         மீன் மகள் பாடுகிறாள்
         வாவி மகள் ஆடுகிறாள்       
         மட்டு நகா் அழகான மேடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா                                   
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ 
        
         விபுலானந்தன் பிறந்த வீடம்மா
         இது வீணை கொடிபோட்ட நாடம்மா
         ஊருராய் கூத்தாடும் ஊரம்மா
        இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா
         ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ

         மீன் மகள் பாடுகிறாள்
         வாவி மகள் ஆடுகிறாள்       
         மட்டு நகா் அழகான மேடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா                                   
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ 

         ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே
         பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே
         பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே
         எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ   

         மீன் மகள் பாடுகிறாள்
         வாவி மகள் ஆடுகிறாள்       
         மட்டு நகா் அழகான மேடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா                                   
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

        அம்மானை மகனுடன் கேட்கலையா
        நீங்கள் அழகான மகுடி பார்கலையா  
        தேன்மதுர  தலாட்டில் உறங்கலையா
        எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா          
 
         மீன் மகள் பாடுகிறாள்
         வாவி மகள் ஆடுகிறாள்       
         மட்டு நகா் அழகான மேடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
         இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா                                   
         ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

         நீர்கலையில் வல்லவர்கள் நீச்சல் இருக்கும்-----?              
         எங்கள் நேர்இளையார் ---------?
         போர்க்கலையில் வல்லபுலிகூட்டமும்  உண்டு
         பகை பொடிபொடியாய் ஆக்கும் போர்ஆட்டமும் உண்டு 

 

 


  பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே


ஈழ நிலத்தினில் எத்தனை நாள்
இன்னும் சாவு பரவிடுமோ
உயிர் இங்கு மலிவென எத்தனை
நாளின்னும் கூவி திரிந்திடுமோ
ஈழ நிலத்தினில் எத்தனை நாள்
இன்னும் சாவு பரவிடுமோ
உயிர் இங்கு மலிவென எத்தனை
நாளின்னும் கூவி திரிந்திடுமோ

வாழும் வயதினில் வாச மலர்
இங்கு தீயில் எரிந்திடுமோ
எங்கள் வாசல் முழுவதும் சோகம்
விரித்திடும் பாயில் சரிந்திடுமோ
வாழும் வயதினில் வாச மலர்
இங்கு தீயில் எரிந்திடுமோ
எங்கள் வாசல் முழுவதும் சோகம்
விரித்திடும் பாயில் சரிந்திடுமோ

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே


அன்னை நிலத்தினில் காவற்
கரும்புலி ஆகி நடந்திடுவோம்
நாம் அங்கு எரிந்திடும் போதிற்
பகை மடி மீதிற் சிரித்திடுவோம்
அன்னை நிலத்தினில் காவற்
கரும்புலி ஆகி நடந்திடுவோம்
நாம் அங்கு எரிந்திடும் போதிற்
பகை மடி மீதிற் சிரித்திடுவோம்

அண்ணன் நினைவினில் எம்மை
மறந்துமே விண்ணில் பறந்திடுவோம்
எம் ஆசையெல்லாம் தமிழ் ஈழம்,
அதற்கென அங்கு வெடித்திடுவோம்
அண்ணன் நினைவினில் எம்மை
மறந்துமே விண்ணில் பறந்திடுவோம்
எம் ஆசையெல்லாம் தமிழ் ஈழம்,
அதற்கென அங்கு வெடித்திடுவோம்

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே


தேசப் புயல் இங்கு வீசும்
பொழுதினில் சோகம் வருவதில்லை
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள்
இனி பகை தீயில் எரிவதில்லை
தேசப் புயல் இங்கு வீசும்
பொழுதினில் சோகம் வருவதில்லை
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள்
இனி பகை தீயில் எரிவதில்லை

நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும்
நம்பி இருந்திடுங்கள்
எம் தேகம் வெடித்திடும் போதில்
விடுதலை கீதம் படித்திடுங்கள்
நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும்
நம்பி இருந்திடுங்கள்
எம் தேகம் வெடித்திடும் போதில்
விடுதலை கீதம் படித்திடுங்கள்

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே

தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே

 

  இந்தப்பாடலுக்கான வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் காசி ஆனந்தன்


 புகைப்படம்: நன்றி ஆனந்தவிகடன் இணையத்தளம்

கருத்துகள் இல்லை

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் ‍‍‍‍- 29

 கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - ‍‍‍‍ 29  ஜனவரி 10, 2025 வெள்ளிக்கிழமை மாலை 7மணி Tamil Writers...