பூக்கள் விடும் தூது
சபையோர்க்கு என் வணக்கம்,
இக்கூட்டத்தைப்பார்த்ததும் எனக்கு கொஞ்சம் மலைப்பு,
ஒரு ஏழையின் கனவு என்பதே என் கவியின் தலைப்பு,
கவிதை தொடுப்பேன்,
அதை பதிக்க காகிதம் எடுப்பேன்,
என் கைபட்டு எழுதுகோல் காகிதத்தை முத்தமிடும்,
அது வேலை நிறுத்தம் என்று ஓர் சத்தமிடும்,
ஏய் எழுதுகோலே!
நீ எழுதாமல் நின்றது ஏன்?
என் எண்ணத்தை கொன்றது ஏன்?
என எழுப்பிடுவேன் ஒரு வினா?
உடன் தடுமாறிடும் என் பேனா,
பாவம் எழுதுகோல் என்ன செய்யும்,
அதனுள் வராமல் நின்றுவிட்டது வரும் மை,
காரணம் எமது வறுமை,
இருந்தும் எம்மிடத்தில் கவிதை உதிக்கின்றதே,
அது தான் ஏழ்மையின் மகிமை,
இப்படி பலமுறை மயங்கி பட்டிருக்கிறேன் பெரும்பாடு,
சொன்னால் வெட்க கேடு,
சிலநேரம் காகிதத்திற்கே தட்டுப்பாடு,
இதயத்தில் இருக்கிறது ஆயிரம் பாட்டு,
இருந்தும் எழுதிப் பார்க்க இல்லை ஒரு நோட்டு,
எல்லாவற்றிக்கும் இந்த அச்சடித்த நோட்டு,
அட ஆட்டிப்டைக்கும் ஆண்டவா,
எனக்கு ஒரு வழி காட்டு,
என் வாழ்வில் இருள்தனை விலக்கு,
ஏற்றிடு ஒரு விளக்கு,
நன்றி.
கருத்துகள் இல்லை