' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இன்று உலக வானொலி தினம்!

 

இன்று உலக வானொலி தினம்!

உலக வானொலி தினம் (World Radio Day) ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி அதாவது இன்று கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை ஐ.நா.வின் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.
 
ஆயினும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.நா வின் 36 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் நவம்பர் 3 ஆம் திகதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் பின்னர் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.
 
வானொலி ஒலிபரப்புச் சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒலிபரப்புச் சம்பந்தமான முடிவெடுப்பாளர்களை வானொலிகள் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
 

 

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...