வில்லிசைக் கலைஞர் கலாவிநோதன் சின்னமணி
சின்னமணி எனஅழைக்கப்படும் க.நா.கணபதிப்பிள்ளை மார்ச30,1936 இல் பருத்தித்துறையில் மாதனை யில் பிறந்து பெப்ரவரி 4, 2015 இல் அமரத்துவம் அடைந்து விட்டார் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞராவார். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கியவர்
திருபூங்குடி வித்துவான் V .K ஆறுமுகம் அவர்கள் வில்லிசை கலைஞராக இருந்த காலத்தில் சின்னமணி அவர்களும் இன்னுமொரு வில்லிசை கலைஞராக கலைவாணர் (சின்னமணி) வில்லிசை குழு என்ற பெயரில் வில்லிசையை நடத்தி வந்தவர்.
இவருடைய கதை சொல்லும் பாணி அங்க அசைவுகள் என்பன இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் இவருடைய வில்லிசை என்றால் அதிக இளைஞர் கூட்டத்தை காணக் கூடியதாக இருக்கும்.
கலியாணத்திற்கு மணமகன் பொம்பிளை பார்க்க வந்தால் பெண் எப்படி நடந்து கொள்வாள் என்பதற்கு " ஒருபக்கம் பார்க்கிறா ஒரு கண்ணை சாய்க்கிறா என்ற பாடலை பாடி கம்பி போட்ட யன்னலிலே கன்னத்தை தேய்க்கிறா என்று இரண்டு வில்லு தட்டும் கோல்களையும் யன்னல் கம்பிபோல் முகத்திற்கு முன்பாக பிடித்துக கொண்டு முகத்தை அதில் தேய்த்து காட்டுவது இன்றும் மனதை விட்டு அகலாது இருக்கின்றது .
சத்தியவான் சாவித்திரி வில்லிசை செய்யும்போது இயமனை எப்படி சாவித்திரி விரட்டுவாள் என்பதை மிகவும் நகைச் சுவையாக சொல்லுவார். "நாங்கள் இயமனை கண்டால் ஓடோ ஓடு என்று ஓடுவோம் ஆனால் இயமன் சாவித்திரியை கண்டு ஓடோ ஓடு என்று ஓடு கின்றான்" என்று அர்த்தம் பொதிந்த வசனங்களை நகைச் சுவையாக சொல்லுவார் கேட்பவர்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் . அப்படி மக்களை தன்வசம் இழுத்து வைத்துக்கொண்டு புராணங்கள் இதிகாசங்கள் எல்லாவற்றையும் வாய்மொழி மூலமாக பரப்பியவர் என்றால் அது மிகை ஆகாது.

நீலகண்டன் 1 of 2
நீலகண்டன் 2 of 2
சத்தியவான் சாவித்திரி
கண்ணகி பகுதி -1
கண்ணகி பகுதி -2
கண்ணகி பகுதி -3
கண்ணகி பகுதி -4
கண்ணகி பகுதி -5
அமரத்துவம் எய்துவிட்ட மதிப்பிற்குரிய கலாவிநோதன் சின்னமணி அவர்களின் இறுதிப்பயணம்.
கருத்துகள் இல்லை