' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஜேர்மன் கவிதைகள்

 நானும் நீயும்

நானுன் கனவு,  நீயென் கனவு,
கனவிலிருந்து இக்கணந்தான் விழித்தோம்
காதலிக்கவே வாழுகின்றோம்,
பின்னர், இரவில் மூழ்கி மறைகின்றோம்,

என் கனவிலிருந்து நீ தோன்றினாய்,
உனதிலிருந்து நான் உதித்தேன்,
நாமிறந்து போகிறோம்
ஒருவரில் ஒருவர் கலக்கும் போது,

ஒரு லில்லிப் பூவின் இதழில்
நடுங்கும் இரு நீர்த் துளிகள்
ஒன்றோடொன்றிணைந்து, ஒரு துளியாகி
உருண்டே ஓடுகின்றன பூவினுள்ளே.

Ich und Du

Wir träumten voneinander
Und sind davon erwacht.
Wir leben, um uns zu lieben,
Und sinken zurück in die Nacht.

Du tratst aus meinem Traume,
Aus deinem trat ich hervor,
Wir sterben, wenn sich Eines
Im andern ganz verlor.

Auf einer Lilie zittern
Zwei Tropfen, rein und rund,
Zerfließen in Eins und rollen
Hinab in des Kelches Grund.

Christian Friedrich Hebbel (* 18. März 1813 in Wesselburen, Dithmarschen; † 13. Dezember 1863 in Wien)

நன்றி: தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை சேமமடு நூலக இதழ்-004- 2010 இலிருந்து
 

கருத்துகள் இல்லை

விவேக சிந்தாமணி 77

ஆவீன மழைபொழிய வில்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ வடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள கோவேந்த ருழுதுண்ட ...