' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆராரோ ஆராரோ கண்ணுமில்லை மண்ணுமில்லை

 

 


ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

கண்ணுமில்லை மண்ணுமில்லை
கருவிலை சுமந்தேன் உன்னை
உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன்
கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்
என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்
உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான்
என் மகனே …..
உன் உசுரு போகிறத உணர வந்தேன் நா(ன் )

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

கருவறை கடந்தவனே
சிறையறை போகையிலே
நான் சிந்திய கண்ணீரு
கடல் நீரா போனதடா
சிலையாட்டம் என் புள்ளை
சிறைப்படும் சேதி கேட்டு
சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

என் மகனே …..
சாமிக்கும் கண்ணில்லையா

வயித்தில சொமந்த புள்ள
கயித்தில தொங்கும் முன்னே
தாலாட்டு பாடிடவா நான் வந்தேன்
தாலாட்டு பாடிடவா நான் வந்தேன்

ஒத்தை மகனா பொறந்ததால
உனக்கிந்த நிலைமையடா
ஊரு சனம் கலங்குதடா
ஊரு சனம் கலங்குதடா

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

ஊருக்கே படிக்கிறேன்
யார் யாருக்கோ படிக்கிறேன்
உனக்கு பாடயில
நான் பாடயில போகலியே
என் உசிரு போகலியே
இந்த குருட்டு பாவி வாழ்கை
இருட்டா போனதடா
ஈர கொலை நடுங்குதடா
பெத்த வயிறு எரியுதடா -அது
பத்தித்தான் எரியுதடா

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

கண்ணான கண்மணியே
கண் மூடும் வேளையிலே
கல்லறையில் நானிருப்பேன்
நீ ஆறடியில் ஏறும் முன்னே
உன் காலடியில் நான் இருப்பேன்



திரைப்படம்:  வென்று வருவான்
இசையமைப்பாளர்: முரளி கிருஷ்ணன்
பாடலாசிரியர்:  முத்து வீரா  
பாடகர்: அமலி




கருத்துகள் இல்லை