' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

சென்னை புத்தகக் காட்சி எங்கு? எப்போது?

 

சென்னையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரியிலும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த சென்னை புத்தகக் கண்காட்சி புத்தக வாசிப்பாளர்களுக்கு ஒரு புதையலைப் போன்றது. தாங்கள் படிக்க விரும்பும் புத்தகங்களை மூட்டையாக கட்டி வீட்டிற்கு கொண்டு செல்வார்கள்.

சென்னையில் 46வது புத்தக கண்காட்சி ஜனவரி 06ம் தேதி தொடங்கி, ஜனவரி 22ம் தேதி வரை 16 நாட்களுக்கு புத்தகக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ளது. சென்னை நந்தனத்தில்YMCA மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக பபாசி செயலர் முருகன் தெரிவித்தார்.

ஆனால் இந்த  ஆண்டு சென்னையில் பன்னாட்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது என்பது இன்னும் புத்தக வாசிப்பாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று தின பன்னாட்டு புத்தக திருவிழா வழமையான புத்தகத்திருவிழாவின் போதே சிறப்பு நிகழ்வாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இதுவரை தமிழ், ஆங்கிலம் போன்ற புத்தகங்களை மட்டுமே நமது வாசகர்கள் வாங்கி படித்து வந்தனர்.

ஆனால் இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் உலகில் உள்ள அனைத்து முக்கிய நூல்களும் இங்குச் சங்கமிக்க உள்ளது. இதனால் இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழா புத்தக வாசிப்பாளர்களுக்கு ஒரு வேட்டையாக இருக்கப் போகிறது.

சென்னையில் இந்தஆண்டு இவ்விழா ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தில் தொடங்கி ஜனவரி 18 வரை நடைபெறும். இத்திருவிழாவை தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கமும் (BAPPASI) இணைந்து நடத்த உள்ளன.

 இதையொட்டி பன்னாட்டு புத்தக திருவிழாவின் இலச்சினை வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 05.11.22 நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு இலச்சினையை வெளியிட்டார்.




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தமிழ் மொழியின் நல்ல இலக்கியங்கள் உலகெங்கும் சென்றடைய வேண்டும், வெளிநாட்டு இலக்கியச் செல்வங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழா நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். முதல் முறையாக சென்னையில் நடைபெறும் இப்புத்தகத்திருவிழாவில் 20 நாடுகள் பங்கேற்கின்றன" என தெரிவித்துள்ளார்.


 


 


கருத்துகள் இல்லை