' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஜேர்மன் கவிதைகள்

 நிலாக் காலம்

வானம் பூமிப் பெண்ணைத் தழுவி
முத்தமிட்டு விட்டான் போலும்,
வண்ணப் பூவாடை அணிந்த அவள்
அவனையே கனவில் காண்கிறாள் போலும்,

வயல்களினூடே வீசியது காற்று,
மெல்ல அசைந்தன கதிர்கள்
விண்மீன்கள் ஒளிர்ந்த  இரவிலே
மென்மையாய்ச் சலசலத்தது காடு,

என் ஆன்மா விரித்தது
தன் இறக்கைகளை,
பறந்தது நிசப்த வெளிதனிலே
வீடு திரும்புதல் போல, 

 -----

Mondnacht

Es war, als hätt der Himmel
Die Erde still geküsst,
Dass sie im Blütenschimmer
Von ihm nun träumen müsst.

Die Luft ging durch die Felder,
Die Ähren wogten sacht,
Es rauschten leis die Wälder,
So sternklar war die Nacht.

Und meine Seele spannte
Weit ihre Flügel aus,
Flog durch die stillen Lande,
Als flöge sie nach Haus.

Joseph Freiherr von Eichendorff   (10.3.1788 Ratibor/Oberschlesien - 26.11.1857 Neisse/Schlesien)

நன்றி: தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை சேமமடு நூலக இதழ்-004- 2010 இலிருந்து

கருத்துகள் இல்லை