' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பிரமிள்

யார் இந்த பிரமிள்?


 பிரமிள்

( 20.04.1939 - 06.01.1997)

பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். அவரின் கவிதைகளில் ஒன்று.
 

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் 
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

 


 அசையும் கவிதைகள் - 02 - பிரமிளின் 'செவ்வானம்'


மஞ்சுத் திரளிற் பெருந்தீதான்

பற்றிப் பரந்து எறிகிறதோ?

துஞ்சப் பரந்து வெய்யோனின்

கனவில் தோன்றும் மயக்கமதோ?


பிரமன் தனது சோகத்தைத்

தீற்றித் தீர்த்த திரைதானே

அரனும் மலையின் மகளும் செய்

காதற் கலையின் வெறியீதோ?


காளித் தேவி கனன்றாளோ?

கந்தன் கோபித் தெழுந்தானோ?

ஊழித்தீயை குழம்பாக்கி

ருத்திரன் செய்த சித்திரமோ?


சிவனும் அனலை வீசினனோ

சீறும் சுடரும் பரவிற்றோ

புவனம் உருகிப் பாய்ந்ததுவோ

அழிவுக் காலம் எய்திற்றோ 

 

இரத்தப் பரிதிக் கோளம் மேற்

கடலில் முழுகும் காட்சி என்

பித்தச் சிந்தைக் கற்பனையைப்

பேயாய் ஆக்கி விட்டதுவோ?

வாசிப்புத் தரும் அனுபவம் வேறு கலைவடிவங்களுக்குள் மாற்றப்படும் போது அது தனது வீரியத்தை இழந்துவிடக்கூடும் அல்லது மேலும் ஏற்றமடையக்கூடும். வெற்றி தோல்விகள் தாண்டி இப்படியான முயற்சிகளே எம்மைப்போன்ற கலைஞர்களை உயிர்போடு வைத்திருக்கிறது.

தமிழ்க் கவிதைப் கவிதைப்பரப்பில் தனித்துவம் மிக்க கவிஞர் பிரமிள். பிரமிளின் கவிதைகளிள் நடனத்திற்கு பொருந்தக்கூடிய ஒரு கவிதையை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். வியத்தகு படிமங்களையும் அழகியலையும் கவிதைகளில் கொண்டுவந்த பெருங்கவிஞன். 'படிமக் கவிஞர்' என்று விளிக்கப்படுபவர்.

சிக்கனச் சொற்களால் இழைந்திருக்கும் கவிதை நடை! அழகும் உணர்வும் மிகுந்திருக்கும் கவிதை மொழி! ஆழமும் வீரியமுடைய பேசுபொருள்!

அவருடைய கவிதைகள் மீதான வாசிப்பென்பது, கவிதை பற்றிய புரிதலை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச்செல்லக்கூடியது! தமிழின் புதுக்கவிதை வரலாற்றில் பிரமிளின் பங்கு தனித்துவமிக்கதாகக் கணிக்கப்படுகிறது.

செவ்வானம்’ எனும் தலைப்பில் அமைந்த அவரது கவிதை இங்கு நடனமாகி வருகின்றது. இயற்கை பற்றிப் பேசும் வரிகள் அரங்கத்தின் முதலாவது அசையும் கவிதையாக…

செவ்வானின் அழகையும் ஆழ்மனதில் அது ஏற்படுத்தும் உணர்வுகளையும் படிமங்களுடனும், சொற்கட்டுகளுடனும் கவிஞர் யாத்திருக்கின்றார்.

 

நடனம்: டிசாந்தி, அபிராமி, ரம்யா, சர்மஜா, அபிநயா, துசாந்தி

ஒளிப்பதிவு: விக்னகுமார் மகேசன்
இசை: கோமதிநாயகம்   
நடன அமைப்பு: கவிதா லட்சுமி

கருத்துகள் இல்லை

Open-Air-Sommerkino auf der Dachterrasse mit Skyline-Blick.

  Ein kleines Stück vom Kuchen Ort :                                    Frankfurt...