' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பூட்டை திறப்பது... | பாரதியார் பாடல்கள்

 

பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே

அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே

ஏட்டைத் துடைப்பது கையாலே
மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே
ஏட்டைத் துடைப்பது கையாலே
மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே

வேட்டையடிப்பது வில்லாலே
அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே…
வேட்டையடிப்பது வில்லாலே
அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே…

 

 

கருத்துகள் இல்லை

24வது அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு குறும்படப் போட்டி

 24வது அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு குறும்படப் போட்டி தங்களது படைப்புகளை cpim24allindiacongress@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்க...