' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பொன்னி நதி பார்க்கணுமே

 

 

ஓ காவேரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்

நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்

பொன்னி நதி பார்க்கணுமே – (தீயறி எசமாறி )
பொழுதுக்குள்ளே – (தீயறி எசமாறி )
கன்னி பெண்கள் காணனுமே – (தீயறி எசமாறி )
காற்றைப்போல – (தீயறி எசமாறி )
பொட்டல் கடந்து – (தீயறி எசமாறி )
புழுதி கடந்து – (தீயறி எசமாறி )
தரிசு கடந்து – (தீயறி எசமாறி )
கரிசல் கடந்து – (வீரம் வெளைஞ்ச மண்ணு )

அந்தோ நானும் இவ்வழகினிலே – (செம்பா செம்பா )
காலம் மறந்ததென்ன –

மண்ணே உன் மார்பில் கிடக்க – (பச்சை நிறைஞ்ச மண்ணு)
அச்சோ ஓர் ஆசை முளைக்க – ( மஞ்சு தூறும் மண்ணு)
என் காலம் கனியாதோ – ( கொக்கு பூத்த மண்ணு )
என் கால்கள் தணியாதோ – ( வெள்ளை மனசு மண்ணு)
செம்பனி – (வீரம் விளைஞ்ச மண்ணு)
தத்தத்தத்தட தத்தத்தத்தட தத்தத்தத்தட
(வீரம் விளைஞ்ச மண்ணு)
பொன்னி மகள் – (தீயறி எசமாறி )
லாலி லல்ல லாலி லல்ல லாலி லல்ல பாடி செல்லும்
வீர சோழ புரி பார்த்து விரைவாய் நீ –
(தாவு அழகா
தாவும் நதியாய்
சகா , கனவை, முடிடா )

பொன்னி நதி பார்க்கணுமே – (தீயறி எசமாறி )
பொழுதுக்குள்ளே – (வீரம் விளைஞ்ச மண்ணு )
கன்னி பெண்கள் காணனுமே – (தீயறி எசமாறி )
காற்றைப்போல – (வீரம் விளைஞ்ச மண்ணு )

செக்க செவப்பி – (தீயறி எசமாறி )
நெஞ்சில் இருடி – (வீரம் விளைஞ்ச மண்ணு )
ரெட்டை சுழற்சி – (தீயறி எசமாறி )
ஒட்டி இருடி – (வீரம் விளைஞ்ச மண்ணு )

சோழ சிலைதான் இவளோ -(செம்பா )
சோள கருத்தாய் சிரிச்சா -(செம்பா )
ஈழ மின்னல் உன்னாலே -(செம்பா )
நானும் ரசிச்சிட ஆகாதா – (அம்பா)
கூடாதே ………….

கடலுக்கேது ஓய்வு – (செம்பா )
கடமை இருக்குது எழுந்திரு – (செம்பா )
சீறி பாய்ந்திடு அம்பாக – (செம்பா )
கால தங்கம் போனாலே தம்பியே எந்நாளும் வருமோடா …

நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

பொன்னி நதி பார்க்கணுமே – (தீயறி எசமாறி )
பொழுதுக்குள்ளே – (தீயறி எசமாறி )
கன்னி பெண்கள் காணனுமே – (வீரம் விளைஞ்ச மண்ணு )
காற்றைப்போல – (தீயறி எசமாறி )

செக்க செவப்பி – (வீரம் விளைஞ்ச மண்ணு )
நெஞ்சில் இருடி -(தீயறி எசமாறி )
ரெட்டை சுழற்சி – (வீரம் விளைஞ்ச மண்ணு )
ஒட்டி இருடி – (தீயறி எசமாறி )
அந்தோ நானும் இவ்வழகினிலே –
(வீரம் விளைஞ்ச மண்ணு
செம்பா செம்பா )

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

கருத்துகள் இல்லை

தமிழ் ஓசை

கானா வடிவில் பாரதி பாடல்... அரங்கத்தை அசரவைத்த ஜேம்ஸ் வசந்தனின்  தமிழ் ஓசை குழு   மின்னஞ்சல்: vaathamilpadi@gmail.com