' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மூத்த நாடகக் கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார்.

 

இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் (காளிமுத்து சந்திரசேகரன்) கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவில் தனது புதல்வரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக மதுரையில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (29.04.2023) காலமானார்.

இலங்கை கலைத்துறையில் வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சியென அனைத்திலும் சாதனை படைத்துச் சகல சமூகத்தினர் மத்தியிலும் புகழ் பெற்றுத் திகழ்ந்த கலாபூஷணம் கே.சந்திரசேகரன் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமரர் மரிக்கார் ராம்தாஸ் எழுதிவந்த “கோமாளிகள்” வானொலி நாடகத் தொடரில் டேவிட் என்ற பாத்திரம் முதல் 

 

அண்மைக்காலமாக வெளியான பல படைப்புகளிலும் அவர் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.
மறைந்த கலாபூஷணம் கே.சந்திரசேகரனின் இறுதி கிரியைகள் திங்கட்கிழமை காரைக்குடியில் இடம்பெறவுள்ளது!

இந்த மாபெரும் கலைஞனின் இழப்பு கலாரசிகப் பெருமக்களுக்கு பேரிழப்பாகும்.அமரர் சந்திரசேகரன் அவர்களின் இழப்பால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலைஞர்கள் உறவினர்கள் அனைவருக்கும்  எங்கள் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும்
தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை மூத்த கலைஞர் கலாபூஷணம் சந்திரசேகரன் அவர்களுக்கு இதயஅஞ்சலியை செலுத்தி நிற்கிறோம்.
ஓம் சாந்தி. ஓம் சாந்தி... ஓம் சாந்தி..

 



 

கருத்துகள் இல்லை