உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day)
உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day 01.12)
உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
அதன்படி, 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக் கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தின் இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக “எச்.ஐ.வி. (HIV) தொற்றை முடிவுக்குக் கொண்டுவருதல், எதிர்ப்புத் திறன் மற்றும் தாக்கத்தைக் குறைத்தல் உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்” என்பதாகும்.
உலகம் முழுவதும் 38 மில்லியன் பேர் எய்ட்ஸ் தாக்கத் திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆண்டுக்கு 1.7 மில்லியன் பேர் புதிதாக எச்.ஐ.வி.(HIV) தொற் றுக்கு உள்ளாவதுடன், இலங்கையில் அது 1 சதவீதத்திற் கும் குறைவாகும்.
கடந்த ஆண்டில் எய்ட்ஸ் தாக்கத்தின் காரணமாக 69 இலட் சம் பேர் உயிரிழந்தனர்.
1987 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளான முதலா வது இலங்கையர் கண்டறியப்பட்டார்.
இந்த நிலையில், இதுநாள் வரையான நிலப்பகுதியில் உத்தியோக பூர்வ தகவல்களின் அடிப்படையில் 3,500 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் புள்ளி விவரங்களின் படி
தமிழ்நாட்டில் எச்.ஐ.வி (HIV) தொற்றின் சதவிகிதம் 2010-11ம் ஆண்டு 0.38 சதவிகிதத்திலிருந்து
2019ம் ஆண்டு 0.18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய எச்.ஐ.வி (HIV)தொற்றினை கண்டறிய 3161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும்
நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்.ஐ.வி (HIV) தொற்றுக்கான பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இளைப்பாறுதல் மையம் என்னும் திட்டத்திற்காக 2.41 கோடி ரூபாய் நிதியுதவியுடன்
மாநிலம் முழுவதும் சுமார் 34 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்த நிதியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. எச்.ஐ.வி,(HIV) எய்ட்ஸ் குறித்த
விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழகத்தில் எச்.ஐ.வி, (HIV)எய்ட்ஸ் தொற்று
இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம் என்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை