தாய்
தாய்
நாவலின் ஆசிரியர் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. இவரது நிஜப்பெயர்: அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கோவ். (Alexei Maximowitsch Peschkow (russisch Алексей Максимович Пешков, Transliteration Aleksej Maksimovič Peškov, Betonung: Alexéi Maxímowitsch Peschków). தன் மூன்று வயதில் பெற்றோரை இழந்து தாத்தாவின் கொடுமை தாளாமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அவர். வாழ்வில் சந்தித்த இன்னல்களையே. எழுத்தாய் வடிவமைக்க ஆரம்பித்தார். ஜார் மன்னரின் படையினார் சுட்டு தள்ளபட்ட போரளிகளில் எஞ்சியவரில் கார்க்கியும் ஒருவர். பிடிபட்ட கார்க்கி சிறையில் அடைக்கபட்டார். பின்னாளில் லெனினின் நட்பு கிடைக்க . அமெரிக்காவிடம் நிதி வேண்டி பயணம் மேற்கொள்ளும் போது அதிரோந்தாக் (Adirondack Mountains) மலைப்பகுதியில் அமர்ந்து எழுதப்பட்டதே இந்நாவல். இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கட்டுள்ளது. ஆனால் கார்கியோ பள்ளியின் பக்கமே போகாதவர். 1904 ஆண்டு வெளிவந்தது இந்த நாவல். 115 ஆண்டுகள் கடந்த விட்டது தற்போதும் இந்நாவல் பேசபடுகிறது என .வாங்க பாக்கலாம்.
கதையின் நாயகி: பெலகேயா நீலவ்னா
பாவெல் விலாசவ் (நாயகனின்) தாய்.
கணவர் : மீகயில்.
அடக்கி ஆள நினைக்கும் ஒரு மனிததன்மையற்ற மிருகத்திற்கு வாழ்க்கைப்பட்ட சராசரி மனைவியே இவளும். கண்ணீர் அடி உதை. வசவு சொல். ஆனால் கள்ளு குடிச்சாலும் கணவன். புள்ளா குடிச்சாலும் புருஷன் என்கிற அடிமையின் சிந்தனையே உடையவள். ஆனால் அடிமை எப்பொதும் அடிமையாய் இருந்திட முடியாது. இல்லையா. கணவனை இழக்கிறாள். மகனால் பாதுகாப்பு நிழலில் அயாசம் கொள்கிறார். இங்கே தான் ஆரம்பம் ஆகிறது தாயின் பயணம். மகனின் நேர்மைறையான மாற்றம். மனதில் மகிழ்சியும் குழப்பமும் பயமும் தருகிறது. இங்கே ஒரு திருகுறளை நினைவூட்ட விரும்புகிறேன்.
குறள்:69
பால் : அறத்துப்பால்
அதிகாரம்: மக்கட்பேறு
குறள்: ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
சன்றோன் எனக்கேட்ட தாய்.
என்ற திருக்குறளே போதும் மகன் பாஷாவிற்க்கும் தாய்க்கும் ஆன உறவை கூற. பலதரபட்ட கதாபத்திரங்கள் எல்லாமும் தன் வாழ்கையை விதி என வாழ்ந்து வரும் வாழ்க்கை பாதையில் சிறு மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பவையே. போராளிக்கும் முன் வந்து உதவும் தாய். மாற்றத்தை கொண்டுவர என்னும் அவளும் போராளியே.
சாஷா : மகனின் காதலி.
மரியா: ஆலைக்கு உணவு எடுத்து விற்பவள்
அத்திரேய்யம்: பாவெல் நன்பன்.
லுத்மீல : மற்றொருமொரு புரட்சி தாய்.
எல்லாரும் அவர் அவர் பாத்திரத்தை பொருத்தமாய் வந்து போகிறார்கள்.
இன்னுமும் நிறைய காத பாத்திரங்கள் காணப்படுகிறது. எனக்கு மனதில் பதிந்தவை இவர்களே.
இறுதியில் இரயில் நிலையத்தில் உளவாளியால் பிடிபடும் தாய். அவள் சொல்லும் உணர்சியான வாசங்கள் . சிலிர்பை தருகிறது.
மனதில் அசாத்திய நம்பிக்கை தருகிறது இந்நாவல்
ஒரு part 1 part 2 part 3 பார்த்த அனுபமாய் இருக்கிறது. 1904 யில் இப்படி ஒரு சிந்தனை கொண்ட புரட்சியின் நாவல்.
நம்மையும் மீறி முட்டாள்களே வெளிச்சத்துக்கு வாருங்கள் என ஆவேசமாக. நாவலில் ஒரு கதாபாத்திரமாக மாற்றி போகிறது வசனங்கள்.
சில புத்தங்களால் ஒருவன் மாற்றபடுகிறான் எனில் புத்தகம் அதை கற்க உதவும் கல்வி. எவ்வளவு முக்கியம்.
திரையிட்டு தடுப்பதை 'திரையை பிடுங்கி கழித்து நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்,
இதுவே நாவலின் கருத்து.
போரட்டங்களே புதிய ஒரு பாதையை கொடுக்கிறது.
நாவலை படித்து என்னை அறியாமல் எனக்கே பல தரபட்ட சமூகம் மேற்பார்வையின் சிந்தனை மாறி ஏதோ தட்டி கேக்கனும் தோனுது.
அப்படி ஒரு தாக்த்தை ஏற்படுத்ம் சக்தி இந்நாவலுக்கு உள்ளது
இதை தமிழில் மொழிபெயர்த்து சுவை மாறமல் கொடுத் தொ.மு.சி. ரகுநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.
சிறப்பான புரட்சி நாவல். தற்காலம் படிக்க அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
கருத்துகள் இல்லை