அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் ?
https://youtu.be/bnKhTouuPwI
VOCAL : sithan Jayamoorthy
PRODUCER : Bruna Jayamorthy
MUSIC DIRECTOR : sithan Jayamoorthy
LYRICST : Ilayakamban
ARTISTS:
FATHER : P. Govindsamy (professor at Tamil university)
SON : K. Siddharthan
CAMERA : Rajmohan
EDITOR : Pon Kumar
SOUND ENGINEER: Das (Sharon studio)
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமா ஆகாசம் ?
அப்பா உன் தியாகத்தை மிஞ்சிடுமா தாய் பாசம் ?
ஓடும் ரத்தம் நாடி நரம்பெல்லாம் உன் வாசம்,
உன் வேர்வைத்துளி தான்பா நான் படிக்கும் இதிகாசம்
உன்னை போல பூமி இல்ல
உன்னை விட சாமி இல்ல
சொல்ல வார்த்தை ஏதும் இல்ல - உன்
சொல்ல விட வேதம் இல்ல
கண்டிக்கும் உன்னோட பாசத்துக்கு முன்னே
கடவுளும் கூட நிகர்இல்ல - அப்பா அப்பா !
வறுமையை சொன்னதில்லை நீ -வாடி
மனம் நின்னதில்லை - எதையுமே தனக்கென நீ
இது வரை எண்ணவில்ல !
சொத்து சுகம் வந்ததில்ல -ஒரு
சொந்தம் அள்ளி தந்ததில்ல -எத்தனையோ
துன்பத்திலும் நீ யாரையுமே நொந்ததில்ல !
ஓழச்சி ஓழச்சி நீ ஓடானே -நா
எழுத படிக்க நீ ஏடானே
நேர்மை வழி போகும் தேரானே - நா
நிலைச்சு நிக்க நீ வேரானே !
அல்லும் பகலும் துயர கடலில் நீராடி -என்ன
ஆலமரமா ஆளாக்கின போராடி ! அப்பா அப்பா !
அப்பா நீ மந்திரமா ? பாடு பட்ட எந்திரமா ?
நம்பிக்கையா நீ இருந்தே - நான் வளர்ந்தேன் கோபுரமா !
ஓயாத சக்கரமா ? கண்ணிமை போல் பத்திரமா எனை
பாதுகாத்து நீ வளர்த்த பாங்க நான்சொல்லணுமா ?
தோளில் சாய்த்தென்ன ஆராட்டி,
துவண்டு விழும் போது சீராட்டி,
பாச மழை தூவி பாராட்டி,
பக்க துணை நின்னு வழி காட்டி,
என்ன வளர்த்த உன் பாசம் தான் மாறாது - ஏழு
ஜென்மத்திலும் நான் பட்ட கடன் தான் தீராது ! அப்பா அப்பா !
பூமி போல உன் பொறுமை, தீராதையா உன் பெருமை !
காலத்துக்கும் உன் கடமை, ஓயலயே என்ன கொடுமைய !
கண்ணீர் துளி பாடுதய்யா பெத்தவனே உன் அருமை !
எதையும் எதிர்பார்க்கா தியாகம் நீ!
எந்தன் வேர் தேடும் மேகம் நீ!
மூச்சில கலந்தாடும் சொந்தம் நீ!
முடிவே இல்லாத பந்தம் நீ!
நீ இல்லாம நான் ஆயிருப்பேன் சேதாரம் - அட
நீ தான்பா என் வாழ்கையோட ஆதாரம் ! அப்பா ! அப்பா !
கருத்துகள் இல்லை