' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

நிலையான வளர்ச்சி இலக்குகள்

 நீடித்த நிலையான வளர்ச்சி என்றால் என்ன?

நிலைபேறான வளர்ச்சி இலக்குகள் அல்லது “2030 நிரல்” என்பது சிறந்த ஆரோக்கியம், வறுமை ஒழிப்பு,  அனைத்து மக்களுக்கும் அமைதி மற்றும் வளம் ஆகியவற்றை அடைவதற்கான அழைப்பு ஆகும். நிலைபேறான வளர்ச்சி இலக்குகள் என்பது  17 இலக்குகளின் தொகுப்பு. உலக இலக்குகள் என அழைக்கப்படும் இதில் 169 குறி இலக்குகள் உள்ளன. இவற்றில் மூன்றாவது இலக்கு ஒட்டுமொத்தமாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது: “அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியத்தையும் நல  வாழ்வையும் உறுதிப்படுத்துவது” நிலைத்த வளர்ச்சிக் இலக்கு 3-ல் 13 குறி இலக்குகள் உள்ளன. இதில் நான்கு குறி இலக்குகளை “நடைமுறைப்படுத்தும் வழிகளை” உள்ளடக்கியவை. பிற தேர்வு செய்யப்பட்ட இலக்குகள்:  அனைத்து வடிவங்களிலும் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்தல், அனைவர்க்கும் சமத்துவமான முறையில் பாதுகாப்பான குடிநீர் கிடைத்தல், சுகாதாரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியம் தொடர்பான குறி இலக்குகளை முதன்மைப் படுத்துபவை.

17 இலக்குகள்:

 
 

இலக்கு 1: வறுமை இல்லை

இலக்கு 2: பசி இல்லை

இலக்கு 3: மக்களுக்குச் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்க்கை

இலக்கு 4: தரமான கல்வி

இலக்கு 5: பாலின சமத்துவம்

இலக்கு 6: சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்

இலக்கு 7: மலிவான தூய்மையான எரிசக்தி

இலக்கு 8: கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி

இலக்கு 9: தொழிற்சாலை, கண்டுபிடிப்புகள் மற்றும் கட்டமைப்பு

இலக்கு 10: சமத்துவ இன்மையைக் குறைத்தல்

இலக்கு 11: நிலைபேறுள்ள நகரங்கள்  மற்றும் சமுதாயங்கள்

இலக்கு 12: பொறுப்புள்ள நுகர்வும் உற்பத்தியும்

இலக்கு 13: தட்பவெப்பநிலை நடவடிக்கை

இலக்கு 14: நீரின் கீழ் உயிர்கள்

இலக்கு 15: நிலத்தில் உயிர்கள்

இலக்கு 16: அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனங்கள்

இலக்கு 17: இலக்குகளுக்கான பங்குதாரர்கள்

நி.வ.இ 3: ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்துகிறது மற்றும் அனைத்து வயதினருக்கும் நல வாழ்வை ஊக்குவிக்கிறது.

குறி இலக்குகள்:

3.1. 2030 க்குள், உலக அளவிலான தாய் மரணத்தை 100000 உயிர் பிறப்புகளுக்கு 70 ஐ விடவும் குறைத்தல்.

3.2. 2030 க்குள், பிறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தடுக்கக் கூடிய மரணத்தை ஒழித்தலோடு அனைத்து நாடுகளும் பிறந்த குழந்தை மரணத்தை 1000 உயிர் பிறப்புக்கு 12 ஐ விடவும் குறைத்தல் மற்றும் 5 வயதுக்கும் குறைவான குழந்தை மரணத்தை 1000 உயிர் பிறப்புக்கு 25 ஆக குறைத்தல்.

3.3. 2030 க்குள், எய்ட்ஸ், காசநோய், மலேரியா, அலட்சியப்படுத்தப்பட்டுள்ள வெப்பமண்டல நோய்களை ஒழித்தல் மற்றும் கல்லீரல் அழற்சி, நீர்வழி பரவும் நோய்கள் மற்றும் பிற பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தல்.

3.4. 2030 க்குள், தடுப்பு மற்றும் சிகிச்சையினால், பரவா நோய்களால் ஏற்படும் குறைப்பிரசவ குழந்தை மரணத்தைக் குறைத்தல் மற்றும் மன நலத்தையும் நல் வாழ்க்கையையும் ஊக்குவித்தல்.

3.5. போதை மருந்துப் பழக்கம் மற்றும் தீய குடிப்பழக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய போதைப் பொருள் பழக்கங்களைத் தடுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தலைப் பலப்படுத்துதல்.

3.6. 2020 க்குள் சாலை விபத்துக்களால்  உலக அளவில் ஏற்படும் மரணத்தையும் காயங்களையும் பாதியாகக் குறைத்தல்.

3.7. 2030 க்குள் குடும்பக் கட்டுப்பாடு, தகவல் மற்றும் கல்வியை உள்ளடக்கிய பால்வினை மற்றும் இனப்பெருக்க  நலச் சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல். தேசிய உத்திகளிலும் திட்டங்களிலும் இனப்பெருக்க சுகாதாரத்தை ஒருங்கிணைத்தல்.

3.8. பொருளாதார இழப்பு பாதுகாப்பு, தரமான முக்கிய சுகாதாரச் சேவை கிடைத்தல்,  பாதுகாப்பான, பலன் அளிக்கும், தரமான மற்றும் மலிவான முக்கிய மருந்துகளும் தடுப்புமருந்துகளும் அனைவருக்கும் கிடைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு.

3.9. 2030 க்குள், ஆபத்தான வேதிப்பொருட்கள் மற்றும் காற்று, நீர், நில மாசு மற்றும் அசுத்தத்தின் காரணமாக ஏற்படும் மரணத்தையும் நோய்களையும் கணிசமாகக் குறைத்தல்.

நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள்: குறி இலக்குகள்

3.அ, அனைத்து நாடுகளுக்கும் பொருத்தமானதாக உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு மீதான  கட்டமைப்பு மாநாட்டுத் தீர்மானங்களை வலிமைப்படுத்தி நடைமுறைப்படுத்துதல்.

3 ஆ, முக்கியமாக வளரும் நாடுகளைப் பாதிக்கும் பரவும் மற்றும் பரவா நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் மற்றும் மருந்துகளை ஆய்வு செய்து உருவாக்குதலை ஆதரித்தல்.  டிரிப்ஸ் உடன்பாடு மற்றும் பொது சுகாதாரம் பற்றிய டோகா  பிரகடனத்துக்கு ஏற்ப மலிவாக முக்கிய மருந்துகளையும் தடுப்பு மருந்துகளையும் கிடைக்கச் செய்தல். இது அறிவுசார் சொத்துரிமையின் வணிகம் தொடர்பான அம்சங்கள் பற்றிய உடன் பாட்டின் ஷரத்துகளை வளரும் நாடுகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துகிறது.  பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நெளிவுசுளிவுகள் சம்பந்தப்பட்டவை இவை. குறிப்பாக அனைவர்க்கும் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்கிறது.

3 இ.  தேசிய மற்றும் உலகளாவிய  அளவில் ஆரம்பக் கட்ட எச்சரிக்கை, ஆபத்தைக் குறைத்தல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றில் அனைத்து நாடுகளின், குறிப்பாக வளரும் நாடுகளின் திறனை வலிமைப்படுத்துதல்.

நிலையான வளர்ச்சி இலக்குகள் 3-க்கு வெளியே தேர்வு செய்யப்பட்ட சுகாதாரம் சார்ந்த குறி இலக்குகள்

குறி இலக்கு 2.2: 2030-க்குள் அனைத்து வகையான ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் ஒழித்தல். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றி பலவீனமாக இருத்தலைப்  போக்குதல், இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் மற்றும் முதியோரின்  ஊட்டச்சத்து தேவைகளை நிவிர்த்தி செய்தல் ஆகிய உலக அளவில் ஒத்துக்கொண்ட குறி இலக்குகளை 2025-க்குள் எட்டுதல்.

குறி இலக்கு 6.2: 2030-க்குள்,அனைவரும்  போதுமான சமத்துவ நிலையில்  சுகாதாரம் மற்றும்  தூய்மையான சூழலைப் பெறுதல். வெளி இடங்களில் மலங்கழித்தலை ஒழித்தல். நெருக்கடியான நிலைகளில் பெண்கள் மற்றும் சிறுமியரின் தேவைகளில் போதிய கவனம் செலுத்துதல்.

குறி இலக்கு 7.1: 2030-க்குள்,அனைவருக்கும் மலிவான, நம்பகமான, நவீன ஆற்றல் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்தல்.

குறி இலக்கு 11.6: நகரங்களின் தீங்களிக்கும் தனிநபர் சுற்றுசூழல் பாதிப்பைக் குறைத்தல். காற்றுத் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்துதல், நகரட்சி கழிவு மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும்.

குறி இலக்கு 13.1: அனைத்து நாடுகளிலும் காலநிலை தொடர்பான ஆபத்துக்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளில் இருந்து மீளமைதல்  மற்றும் தகவமைவுத் திறனை  வலிமைப்படுத்துதல்.

குறி இலக்கு 16.1:  எல்லா இடங்களிலும் அனைத்து வகையான வன்முறைகளையும் அது தொடர்பான மரண வீதங்களையும் கணிசமாகக் குறைத்தல்.

குறி இலக்கு 17.19:  2030-க்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியை நிறைவுசெய்யும் படியாகவும், வளரும் நாடுகளில் புள்ளிவிவர திறன் உருவாக்கத்துக்கு துணைநிற்கும் படியாகவும், நிலையான வளர்ச்சியில் முன்னேற்றத்தின் அளவுகோல்களை உருவாக்க தற்போது இருக்கும் முன்முயற்சிகளை கட்டமைத்தல்.

 


 



கருத்துகள் இல்லை