' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஆணும் ஒரு தாய் தான்

========================
காலை அலுவலகம் செல்கையில்:
எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க.
இரவு 2 மணி:
கணவன் : ஒரு வேளை  உண்டாயிருந்தா என்ன பண்றது?
மனைவி : பெத்துகிற நானே கவலை படலை.உங்களுக்கு என்ன? தூங்குங்க.
விடியற்காலை 5 மணி:
கணவன் : போய் பாத்துட்டு வாயேன்.
பயமா இருக்கு.
5:10 மணி:
மனைவி : இந்தாங்க நீங்களே பார்த்துக்கோங்க.
கணவன் : (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமாக பார்த்துக்கிறேன்.
மனைவி : பாத்துக்காம இருந்து தான் பாரேன். 
2 ஆம் மாதம்:
மனைவி : Doctor checkup க்கு appointment போட்டியா?
எனக்கு பயங்கரமாக தலை சுத்துது.
எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.
இடுப்பெல்லாம் வலிக்குது.
கணவன் : நீ rest எடு. நான் பாத்துக்கிறேன்.
3 ஆம் மாதம்:
மனைவி : மருத்துவமனைக்கு கூட வருவ தானே?
அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.
அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.
நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?
கணவன் : இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?
மனைவி : கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. 😞
கணவன் : சரி. படுத்துக்கோ. ஒண்ணு ம் சாப்பிட வேண்டாம்.
மனைவி : அப்போ நான் பட்டினியா இருந்தா பரவாயில்லே. நீ மட்டும் கோழி சாப்பிடுவ.
4 ஆம் மாதம்:
இரவு 3 மணி:
மனைவி : எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?
கணவன் : (தூக்க கலக்கத்தில்) போறேன்.
வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .
அவள்: 
5 ஆம் மாதம்:
மனைவி : கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.
கணவன் : பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.
மனைவி : என்ன இப்படி அமுக்கறே? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குறே?
6 ஆம் மாதம்:
மனைவி : முக்கி முனகி எந்திரிக்க முனைகையில்
கணவன் : என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.
மனைவி : யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில.
கணவன் : இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம்.
மனைவி : (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன்.
7 ஆம் மாதம்:
கணவன் : பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.
மனைவி : எதுக்கு என்ன பார்க்குறே? எதுக்கு சும்மா பார்க்குறே? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க?
கணவன் : பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?
மனைவி : நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பார்க்குறே? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும்.
கணவன் : சரி. நான் போறேன். உன்னை பாக்கல.
மனைவி : ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பார்க்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்கே . போ போ. என்ன பார்க்காதே.
8 ஆம் மாதம்:
நடுஇரவில்:
மனைவி : ஏன் தூங்குற?
கணவன் : இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?
மனைவி : ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான்.
கணவன் : சரி. நான் திரும்பியே படுத்துகிறேன்.
9 ஆம் மாதம்:
மனைவி : ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.
கணவன் : பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.
மனைவி : நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, "push, push" னு கூவுனா, குரள்வளைய கடிச்சு வெச்சுடுவேன்.
கணவன் : சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.
மனைவி : ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.
கணவன் : கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ. (இனம் புரியாத நகைச்சுவை)
10 ஆம் மாதம்:
மனைவி : என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்றிடுங்க. இதுக்கு மேல முடியாது.
கணவன் : கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான்.
கூடவே இருந்து, முதல் மாதத்திலிருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த என முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, " கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ " என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது "ஆண்களின் பேறுகாலம்" .
பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான்.
பெண்கள் பேறுகாலம் என்னவோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.
பெண்களுக்கு வயிற்றில். ஆண்களுக்கு மனதில்.
பெண்களுக்கு சேய். ஆண்களுக்கு தாயும் சேயும்

 

கருத்துகள் இல்லை

Ray of Hope Documentary - Trailer

Lived and told by: Rathika Sitsabaiesan, MIR, ADR, Prosci, Ziglar Coach Sutha Shanmugarajah Collin Collin Directors/Writers: Ryan Singh , ...