Charlie Hebdo சார்லி ஹெப்டோ 07.01.2015
Charlie Hebdo சார்லி ஹெப்டோ 07.01.2015
சார்லி ஹெப்டோ செய்தியகம் தாக்கப்பட்டு ஆறு வருடங்கள்
கடந்துவிட்டன. 7 ஜனவரி 2015 காலை 11 மணி Chérif Kouachi மற்றும்
அவரது சகோதரர் Saïd Kouachi ஆகியோர் செய்தியகத்தில்
நுழைந்து, வரைஞர்கள் Cabu, charb, Honoré, Tignous, Wolinski
உளவியல் ஆய்வாளர் Elsa Cayat பொருளியலாளர் Bernard Maris
காவற்துறையைச் சேர்ந்த Franck Brinsolaro எழுத்து திருத்துனர்
Mustapha Ourrad இன்னும் Michel Renaud Frédéric Boisseau, Ahmed
Merabet ஆகியோரை தயவு தாட்சணியமின்றி சுட்டுக்
கொன்றனர்.
இந்த வருடமும் இத் துக்க நிகழ்வு வழமை போன்று
நினைவு கூரப்பட்டது. இன்று செய்தியகம் பிரான்சில்
அதிகளவு பாதுகாப்பான கட்டிடங்களில் ஒன்றிற்கு
மாற்றப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முகவரிகூட இரகசி
யமாகவே வைக்கப்பட்டுள்ளது. புதிய செய்தியாளர்கள்
வரைஞர்களுடன் Charlie Hebdo தனது பணியைத் தொடர்ந்து
வருகின்றது. இரண்டு முகமூடி அணிந்த முட்டாள்களா
எம்மை அடித்துவிடப் போகின்றார்கள்? என Riss தனது
பந்தியில் குறிப்பிட்டுள்ளார். அன்று நாம் கடவுளை,
அரசை, மதத்தலைவர்களை இராணுவங்களை எதிர்த்துக்
குரல் கொடுத்தோம். இன்று எமது ஊடக அறத்தை
"தணிக்கை" எனும் ஒற்றைச் சொல்லில் தமது தொலைபேசி
விசைப்பலகைகளுக்கு பின் ஒளிந்திருந்து சமூக
வலைத்தளங்களில் பாடமெடுப்பவர்களை எவ்வாறு
எதிர்ப்பது? எனவும் தனது வெறுப்பை பதிவுசெய்துள்ளார்.
ஐந்தாவது வருடச் சிறப்பிதழில் புதிய தணிக்கைகள்
- புதிய சர்வதிகாரிகள் என Coco வின் சித்திரத்துடன்
வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை