' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இரண்டு கட்டை விரலை கட்டி

 

LYRICS & SINGER : GANA CHELLA MUTHU
MUSIC :  DINESH

இரண்டு கட்டை விரலை கட்டி வச்சு நீ கட்டிலில தூங்க‌
அரைக்கட்டையில வேக போற அப்பா நீ போற
உன் தேரை நான் தூக்கி போறன்

இரண்டு கட்டை விரலை கட்டி வச்சு நீ கட்டிலில தூங்க‌
அரைக்கட்டையில வேக போற அப்பா நீ போற
உன் தேரை நான் தூக்கி போறன்

அப்பா உன் மூச்சு நின்னு போனதுமே
அம்மா கண்களிலே கண்ணீர்க் கோலந்தான்
ஏன் கடவுள் எங்க‌ வாழ்க்கையிலே
எங்க குடும்பத்துக்கு தந்த சோகம் தான்

பூவும் இல்ல அம்மாவுக்கு பொட்டுமில்ல‌
மஞ்சள் முகம் நீயில்லாம பூத்ததில்ல
அப்பா பாரு ஒரு தடவை மேல
போட்டாங்களே பட்டுபுடவை போற
ஊர்கோலம் போற அப்பா நீ போற‌
போகும் போது என்ன கொண்டு போற‌

இரண்டு கட்டை விரலை கட்டி வச்சு நீ கட்டிலில தூங்க‌
அரைக்கட்டையில வேக போற அப்பா நீ போற
உன் தேரை நான் தூக்கி போறன்

நீ உழைச்சு இரத்த நாளமெல்லாம்
அப்பா உடம்புக்குள்ளே ஒடுங்கி போச்சுப்பா
உன் உடம்பு சுடுகாட்டிலதான்
உனக்கு இறுதி சடங்கே முடிஞ்சு போச்சுப்பா
எங்கப்பா எங்களை கஸ்டப்பட விட்டதில்ல
கோபம் வந்தாகூட யாரையுமே திட்டினதில்ல‌
நீ ராஜா வாழ்க்கை வாழ்ந்த
உன் மனைவி மடில மண்ணா சாஞ்ச போற‌
ஊர்கோலம் போற போகும் போது என்ன கொண்டு போற‌

இரண்டு கட்டை விரலை கட்டி வச்சு நீ கட்டிலில தூங்க‌
அரைக்கட்டையில வேக போற ஊர்கோலம் போற
உன் தேரை நான் தூக்கி போறன்
போற ஐயா நீ போற
உன் தேரை நான் தூக்கி போறன்

கருத்துகள் இல்லை

சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்

 சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்   01. அல்லியம் 02. கொடுகொட்டி 03. குடைக்கூத்து 04. குடக்கூத்து 05. பாண்டரங்கம் 06. மல்ல...