ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்
மண்ணில்:15.11.1931 விண்ணில்:17.01.2025
ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் காலமானார்.
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1985ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலாசார குழுவுக்காக மண்சுமந்த மேனியார் எழுதித் தயாரிக்கப்பட்டது. மண்சுமந்தமேனியர் என்னும் நாடகத்தினூடாக ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி விபரித்துள்ளார் சண்முகலிங்கம். அன்னை இட்ட தீ (1991) நாடகத்தின் ஊடாக போராட்டத்தின் காரணமாக மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடுக்கள் தொடர்பாக பேசியிருந்தார். எந்தையும் தாயும் முதுமையில் பெரியோர்களை பேணுதல் தொடர்பாக பேசுகிறது. யார்க்கெடுத்துரைப்பேன் என்ற இவரின் நாடகம் அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்த அகதிகளின் அவலநிலையை எமது கண்முன் கொண்டு வருகிறது. ஒரு பண்பான ஆர்ப்பாட்டமில்லாத தனித்துவமான நாடக ஆளுமையை நாம் இழந்து விட்டோம். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
நன்றி:
தகவல்: https://www.virakesari.lk/article/204111
https://noolaham.org/wiki/index.php/மண்_சுமந்த_மேனியர்
மண் சுமந்த மேனியர் - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள்
கருத்துகள் இல்லை