' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மானம் உணரும் நாள் இந்நாள்.

 

 
நரகனை கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப்பெயரெல்லாம் யாரை குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்,
பண்ணுகின்றனர் என்பது பொய்யா?
இவைகளை நாம் எண்ண வேண்டும்.
எண்ணாதெதையும் நண்ணுவ தென்பது,
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ள நாளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை
"ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்"
என்று கேட்கும் நாள்,
மடமை கிழிக்கும் நாள்,
அறிவை ஊட்டும் நாள்,
மானம் உணரும் நாள் இந்நாள்.
தீவாவளியும் மானத்துக்கு தீ-வாளி ஆயின்
சீ என்று விடுவிரே!
 
-பாரதிதாசன்

 

கருத்துகள் இல்லை

Open-Air-Sommerkino auf der Dachterrasse mit Skyline-Blick.

  Ein kleines Stück vom Kuchen Ort :                                    Frankfurt...